Saturday, 28 September 2013

கவிதை

கவிதை 


பெரியதாய் வாக்களிப்பதை விட
சிறியதாய் கொடுப்பதே மேல். 

கவிதை

கவிதை 


தேவையில்லாததை அனைத்தையும் 
வாங்க ஆரம்பித்தால் 
தேவையானவற்றை  அனைத்தையும் 
விரைவில் விற்றுவிடுவாய் . 

தேடல் - கவிதை

தேடல் - கவிதை 


ஏழை உணவை தேடுகிறான் 
பணக்காரன் பசியை தேடுகிறான் 

படித்தவன் வேலையை தேடுகிறான் 
படிக்காதவன் பணத்தை தேடுகிறான் 

உழைப்பவன் வளமையை தேடுகிறான் 
உழைக்காதவன் வியர்வையை தேடுகிறான் 

நோயாளி சிகிச்சையை தேடுகிறான் 
மருத்துவன்  மருந்தினை தேடுகிறான்  

பெண் ஆணினைத் தேடுகிறாள் 
ஆண் பெண்ணினைத்  தேடுகிறான் 

யாரும் அவரவரை தேடவில்லை
இறைவனால் படைக்கப்பட்ட 
இவை அனைத்தும் 
என்றுதான் இறைவனை தேடுமோ? 

விதை - கவிதை

விதை - கவிதை 


ஒரு மரத்தினால் 
உருவாகும் விதைகளை 
கூட எண்ணிவிடலாம் .
ஆனால் 
ஒரு விதையினால் 
உருவாகும் மரங்களை 
எண்ணிவிட முடியாது .

பணம் - கவிதை

பணம் - கவிதை 


சேர்ந்தே இருப்பது 
பணமும் பகட்டும் 

சேராதிருப்பது 
பணமும் வறுமையும் 

வாங்க முடிந்தது  
பணத்தினால் மனிதனை 

வாங்க முடியாதது
பணத்தினால் இறைவனை 

கொடுக்க முடிந்தது 
பணத்தினால் ஆணையை 

கொடுக்க முடியாதது 
பணத்தினால் நிம்மதியை 

செய்யக் கூடியது 
பணத்தினால் நற்செயலை 

செய்யக் கூடாதது 
பணத்தினால் ஏளனத்தை 

விரும்பக் கூடியது 
அளவான பணம் 

விரும்பக் கூடாதது 
தேவைக்கதிகமான பணம் 

பாராட்டக் கூடியது 
பணத்துடன் அமைதி 

பாராட்டக் கூடாதது 
பணத்தால் செல்வாக்கு .
 

Sunday, 22 September 2013

கடிகாரமும் காதலும் - கவிதை

கடிகாரமும் காதலும் - கவிதை


பெற்றோராகிய நொடிமுள் 
நிமிடத்திற்கு ஒரு முறை 
சுற்றி பாதுகாத்தாலும் 
காதலனாகிய சிறிய முள்ளும் 
காதலியாகிய பெரிய முள்ளும் 
மணிக்கு ஒரு முறை 
ஒன்று சேர்ந்து தான் 
ஆக வேண்டும் அது தான் 
இயற்கையின் விருப்பமும் .

                            - ப . மாரிமுத்து 

கண்ணாடி - கவிதை

கண்ணாடி - கவிதை 


கண்ணாடி  நீ 
கபடமில்லாமல் முன்னுள்ளவற்றை 
காட்டும் நீ 
அவை காலத்தால் 
மாறிவிடுமென்றோ நீ 
இடவல மாற்றத்துடன் காட்டுகின்றாய் .

உழைப்பு - கவிதை


உழைப்பு - கவிதை 


செயல்களை கடினமாக்குவது 
சோம்பேரித்தனம் 
அதை எளிதாக்குவது 
உழைப்பு .

வெண்ணிலா - கவிதை


வெண்ணிலா - கவிதை 


வெள்ளித் தட்டு 
திரண்ட வெண்ணெய் 
கறந்த பால் 
பளிங்கு வெள்ளை 
சொலிக்கும் முத்து 

நிழற்படம் - கவிதை

நிழற்படம் - கவிதை 


நிழலை மட்டும் காட்டும் நீ 
என்று 
நிஜத்தை காட்ட போகிறாய்?

நிலையாய் இருக்கும் நீ 
என்று 
நிலையாமையை உணர்த்த போகிறாய்?

நிலைக்காத ஒன்றை உணர்த்தும் நீ 
என்று 
நிலைத்தவற்றை உணர்த்த போகிறாய்?

                                        - ப . மாரிமுத்து 

பணம்-கவிதை

பணம்-கவிதை 


பணத்தை ஆட்டி வைப்பவன் 
மனிதன் 
பணத்திற்கு ஆடுபவன் 
மிருகம் 

பணத்தைக் கொண்டு வாங்க முடிந்ததது 
மனிதனை 
வாங்க முடியாதது 
மனத்தை 

நீ பணக்காரனாய் 
ஆக வேண்டுமானால் 
தேவையை குறைத்து 
நிறைவை வளர்த்துக்கொள் 

பணமும் நிம்மதியும் 
பிறவி எதிரிகள் 
பணமும் செல்வாக்கும் 
பிறவி இரட்டையர்கள் 

பணமும் புகழும் 
பக்கத்துவீட்டு பங்காளிகள் 
பணமும் மகிழ்ச்சியும் 
தூரத்து சொந்தங்கள் 

பணமும் ஏளணமும் 
நெருங்கிய நண்பர்கள் 
பணமும் மரியாதையும் 
அப்பாவும் மகனும் 

பணமும் தேவையும் 
உடன்பிறவா தோழர்கள் 
பணமும் மனநிறைவும் 
எதிரி வீட்டுக்காரர்கள் 

பணமும் பகட்டும் 
கணவனும் மனைவியும் 
பணமும் பணிவும் 
சேர்ந்தே இருக்கவேண்டியவர்கள் .

                                             - ப . மாரிமுத்து .

Saturday, 21 September 2013

பாதுகாப்பு - கவிதை


பாதுகாப்பு - கவிதை 


ரோஜாவின் பாதுகாப்பு 
முள் 

தேனின் பாதுகாப்பு 
தேனீ 

முத்தின் பாதுகாப்பு 
சிப்பி 

மீனின் பாதுகாப்பு 
நீர் 

மானின் பாதுகாப்பு 
காடு 

மூளையின் பாதுகாப்பு 
கபாலம் 

பெண்ணின் பாதுகாப்பு 
யார்?

ஆணின் பாதுகாப்பு 
யார்?

                    -சமூகம்.

வாழ்க்கை - கவிதை

வாழ்க்கை - கவிதை 


வாழ்க்கை சந்திரனைப் போன்றது 
பல  நேரம்  குறை மதி 
சில நேரம் மட்டுந்தான் நிறை மதி

வாழ்க்கையையும் நேரத்தையும் 
சரியாக பயன்படுத்தி 
முன்னேற்றம் காண்.

வாழ்க்கை என்பது
குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும்
ஓர் கலை .

வயது - கவிதை

வயது - கவிதை 


வாழ்க்கையில் தகுதி 
உயர்கிறதோ இல்லையோ 
வயது உயர்ந்து 
கொண்டே இருக்கிறது .

பிறர் நினைவு நாள்
 கொண்டாடும்  போதெல்லாம் 
நமக்கும் ஒரு 
வயது கூடுகிறது.

பெண்ணின் பேச்சுரிமை

பெண்ணின் பேச்சுரிமை - கவிதை 


சமூகம் 
மரம் மாதிரி
 
ஆணினம் 
அதில் கிளை மாதிரி

பெண்ணினம் 
அதில் வேர் மாதிரி 

கிளை பேசினால் 
அதை ஊர் கேட்கும்  

ஆனால் 
வேர் பேசினால் 
அதை யார் கேட்பதோ ?

பூமித்தாய் கட்டாயம் கேட்பாள்
பூரணமாக கேட்பாள்.

விதவை

விதவை - கவிதை


தாய் வைத்தார் திலகத்தை 
இரண்டே நாட்களில் 

தாய் சூட்டினால் பூவினை 
 இரண்டு வருடத்திற்குள் 

கணவன் கட்டினார் தாலியை 
இருபதாம் ஆண்டில் 

கணவனை நான் இழந்ததால் 
இழந்தேன் இவை அனைத்தையும் 
இரண்டே வாரத்தில் 

பெண்ணே 
உன் எண்ணத்தை மாற்று 
மாற்றம் மட்டுமே மாறாது .

வடிக்கட்டிய முட்டாள் தனம்

வடிக்கட்டிய முட்டாள் தனம் - கவிதை 


பணக்காரனாய் சாகவேண்டும் 
என்பதற்காக 
வறுமையை வாழ்வதும் 
வடிக்கட்டிய முட்டாள்தனம் .

பொங்கல் வாழ்த்து கவிதை

பொங்கல் வாழ்த்து  கவிதை 


மார்கழி தான் ஒடிப்போய் 
தை பிறக்க போகும் 
இன்னும் ஓரிரு நாட்களில் 
அச்சு வெல்லம் , பச்சரிசி 
வெட்டி வைத்த செங்கரும்பு 
அத்தனையும் இனிக்கின்ற 
இந்த நாள் 
பொங்கல் திருநாள் .

                    - ப. மாரிமுத்து 

Friday, 20 September 2013

பெண் - கவிதை

பெண் - கவிதை 

தங்க மணியும் போட வேண்டாம் 
வெள்ளி மணியும் கூட போட வேண்டாம் 
அதற்காக 
நெல் மணியை தொண்டைக் குழிக்குள் போட்டு விடாதே! 

தாய்பாலும் வேண்டாம் 
புட்டி பாலும் வேண்டாம் 
அதற்காக 
கள்ளிப்பாலைத்  தந்துவிடாதே ! 

தங்கத் தொட்டிலில் போட வேண்டாம் 
தரை விரிப்பில் கூட போட வேண்டாம் 
அதற்காக 
குப்பைத் தொட்டியில் போட்டு விடாதே !

நானும் உன் போல தானே ?
உன்னைப் போல் நான் வருந்தக் கூடதென்பதற்கா?
உன் பெற்றோர் போல் நீ வருந்தக்கூடாதென்பதற்கா ?
மாறும் உலகில் நீயும் மாறு 
என்னையும் வாழ விடு .
                                                     
                                                               - ப. மாரிமுத்து 



Wednesday, 18 September 2013

SCHOOL

தொடக்கக்கல்வித்துறையின் கீழ்  இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 02.10.2013 முதல் 08.10.2013 வரை JOY OF GIVING WEEK கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு .