Thursday, 31 October 2013

அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்





நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத
 வகையில் தெரிவிக்கவும். நன்றி.

SSLC / HSC SUPPLEMENTARY EXAMINATION SEP / OCT 2013 - RETOTALLING / COPY OF THE ANSWER SCRIPTS

இடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் மறுகூட்டல் (Retotalling), பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் 04.11.13 முதல் 08.11.13 வரை இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு.கே.சி.வீரமணி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்






நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை


திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
 கழிப்பறைகளில் தண்ணீர் குழாய் வசதி இல்லையெனில் வாளிகளில் தண்ணீர் நிரப்பி இருக்க வேண்டும். பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் கழிப்பறைகளை பயன் படுத்த வேண்டும். கழிப்பறைகள் பழுது நிலையில் இருந்தாலோ அல்லது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ, குடிநீர் வசதி இல்லாமல் இருந்தாலோ அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ.,


தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நவம்பர் 1 ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 அன்றைய தினம், மாவட்ட இணைப்புக்கு அரும்பாடு பட்ட மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன


2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.


""கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற  விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

DUAL DEGREE இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
 வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்?


தமிழக அமைச்சரவையில் சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வகித்த சி.வி.சண்முகம், "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோர் பதவியை இழந்து, எம்.எல்.ஏ.,வாக மட்டும் தற்போது பதவி வகிக்கின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவியை காலி செய்யும், "சென்டிமென்ட்" கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் அவர் நீடிப்பாரா? அல்லது வழக்கமான, "சென்டிமென்ட்"டில் அவரும் சிக்குவாரா என்ற கலக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

DEEPAVALI 2013 PRECAUTIONS MEASURES

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு
DSE - DEEPAVALI 2013 PRECAUTIONS MEASURES REG PROC CLICK HERE...



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு


DEE - ALL DEEO / AEEO OFFICES R CELEBRATE ANTI-CORRUPTION WEEK FROM 28.10.2013 TO 02.11.2013 REG PROC CLICK HERE...




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை


வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது.
 இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31) கடைசி நாள்.வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

LIST OF HOLIDAY 2013-14 CHANGED IN VELLORE DISTRICT

தொடக்கக் கல்வி - வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறை பட்டியலில் திருத்தம் செய்து உத்தரவு




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 BT ASST POSTs SANCTIONED AS PER GO.274 DATED.29.10.2012


TO DOWNLOAD PAY ORDER FOR 1591 BT ASSTs CLICK HERE...



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNPSC GRPUP 2 EXAM DATE - NO CHANGE

குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை

         சென்னை: டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம் அறிவித்துள்ளது.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும்



             வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும். நடுநிலை பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவு 



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5000அபராதம்....



        ஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5000அபராதம்....மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு .......




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

Wednesday, 30 October 2013

பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி


தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.

அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது

குறிப்பிடத்தக்கது.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்



தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.சி.வீரமணி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 மேலும் மாண்புமிகு விஜயபாஸ்கர் அவர்களை சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்



விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி வேலை நாட்களில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் குறுவள மைய பயிற்சி மற்றும் 10 நாட்கள் வட்டார வள மைய அளவில் பயிற்சி, ஆண்டுக்கு 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள் ஆண்டுக்கு 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.ஆனால் அதே வேளையில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ளும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்கள் விடுமுறை நாளில் பணியாற்றினால் அவர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.தற்போது விடுமுறை நாட்களில் பயிற்சியில் பங்கேற்கும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். 6 மாதங்கள் வரை இந்த ஈடு செய் விடுப்பை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

கல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்


அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர். நடுநிலை பள்ளி: தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கடும் சரிவை சந்தித்து வந்தது.
 மக்கள் தொகை அதிகரிப்பால், ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டிய,முதல் வகுப்பு சேர்க்கை, குறைந்து கொண்டே வந்ததற்கு முக்கிய காரணம், பிரைமரி, நர்சரி பள்ளிகள்.இதனால் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். ஆண்டுக்காண்டு, மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால்,அதற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களின் அதிருப்தி, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு உள்ளிட்டவை களால், 40:1 என்ற விகிதத்தில் இருந்த மாணவர், ஆசிரியர் விகிதத்தை, 30:1என்ற விகிதத்தில் மாற்றிஅமைத்தனர்.இருந்த போதும், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காததால், பணிபுரியும் ஆசிரியர்களின் பதவியை தக்க வைத்துக்கொள்ள, ஆங்கில வழிக்கல்வி என்ற கோஷத்தை முன்வைத்தது. இதை அரசும் ஏற்று, அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி துவக்க உத்தரவிட்டுள்ளது. எண்ணிக்கை: @@ஆங்கில வழிக்கல்வி என்றதும், தனியார் பள்ளிகளில் பணம் கட்ட சிரமப்படும், பெற்றோர் ஆவலுடன் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் கடந்த ஆண்டை விட,நடப்பாண்டு முதல் வகுப்பில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது.கடந்த ஆண்டு முதல் வகுப்பில், 3 லட்சத்து, 21ஆயிரத்து, 947 மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டில், 4 லட்சத்து, 14ஆயிரத்து, 567 பேர் சேர்ந்துள்ளனர். 93,000 மாணவர் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் அதிகமாகியுள்ளதாக கல்வி துறை அலுவலர்களும் பெருமிதப்பட்டு கொள்கின்றனர்.ஆனால்,பள்ளிகளில் காணும் நிலையோ, தலைகீழாக உள்ளது. ஆங்கில வழிக்கல்வி மோகத்தில், பெரும்பாலான பள்ளிகளில் இருந்த மொத்த தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதனால், தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவாக சுருங்கிஉள்ளது.நகர்ப்புற பள்ளிகளில் பெரும்பாலும், இரு ஆசிரியர் கொண்ட பள்ளிகளாகவே உள்ளதால்,அவற்றில், தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என,அனைத்து மாணவர்களையும், ஒரே வகுப்பில் அமரவைத்து, ஒரே ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.அதே போல், ஆங்கில வழிக்கல்விக்கென, செயல் வழிக்கற்றல் அட்டை எதுவும் வழங்கப்படாததால், அவர்களுக்கும், தமிழ் வழிக்கல்விக்கான அட்டை மூலமே கற்பிக்கப்படுகிறது. இதனால் பெயரளவில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கப்பட்டு, வகுப்பு சூழலில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. செயல் வழிக்கற்றல்:@@இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:ஆங்கில வழிக்கல்வி என்றால், அதற்கென தனி ஆசிரியர், தனி வகுப்பறை,பாடப்புத்தகம், செயல் வழிக்கற்றல் அட்டை என, அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு வழங்குவதையே, கொடுத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து,அரசு பள்ளியில் சேர்த்த பெற்றோரின் நம்பிக்கையும் உடைக்கப்படுகிறது.இதனால், அரசுப் பள்ளிகளில் இருந்த தமிழ் வழிக்கல்வி அழிவதோடு, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமைந்துவிடும். இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

FESTIVAL ADVANCE பண்டிகை முன்பணம் கைவிரிப்பு - ஆசிரியர்கள் அதிர்ச்சி





நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்


"மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மாநில துணைத் தலைவர் இளங்கோ கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் பொதுத்தேர்வு தமிழ் பாடத்திற்காக வடிவமைத்த புதிய வினாத்தாள் கடினமாக உள்ளது. இதனால் தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது.

பழைய முறையில் ஏழு மதிப்பெண் நெடுவினாக்களில் செய்யுள், உரைநடை பகுதியில் நான்கு கேட்கப்பட்டு இரு வினாவிற்கு விடையளித்தால் போதும். புது முறையில் செய்யுள், உரைநடை பகுதியில் தலா இரு வினாக்கள் கேட்டு ஒரு வினாவிற்கு எட்டு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வினாக்கள் குறைவால், விடையளிக்க திணறுகின்றனர்.

இரண்டாம் தாளில் பழைய முறைப்படி இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பிரித்து எழுதுதல், பிழை திருத்தம், பிற மொழி சொற்களை நீக்குதல் என தனித்தனி தலைப்பில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மூன்று இடம் பெறும். வாக்கிய மாற்றம் தலைப்பில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழு கேட்கப்படும். தற்போது இவை அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக்கி 20 கேள்வியாக மாறியுள்ளன. சிலர் 10 வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பதால் மதிப்பெண் குறைந்து தோல்வி அதிகரிக்கிறது.

புதிய வினாத்தாளில் மாற்றம் செய்து எளிமையாக்க வேண்டும். பிளஸ் 2 வில் தமிழ் பாடத்திற்கு "பேசுதல், கேட்டல் திறனுக்கு" 20 மதிப்பெண் அளிப்பது போல 10ம் வகுப்பிற்கும் வழங்க வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

குழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன?



கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை காத்தல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கிறது.

குழந்தைக்கு கண்ணாடி தேவை என்பதை பெற்றோர் எவ்வாறு உறுதி செய்வது?

ஒரு குழந்தை, தனது பார்வை தெளிவாக இல்லை என்பதைப் பற்றி அரிதாகவே, தன் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது மற்றும் கண் வலிக்கிறது என்று தெரிவித்தாலோ அல்லது ஒரு அம்சத்தை தெளிவாக பார்க்கும் பொருட்டு, கண்களை பாதியாக சுருக்கினாலோ, உடனடியாக ஒரு நல்ல கண் மருத்துவரிடம் உங்கள் குழந்தையை அழைத்துச்செல்ல வேண்டும்.

கண் பார்வை பிரச்சினையுள்ள குழந்தைகள், ஒரு விஷயத்தைப் படிக்கையில், கண் அருகே வைத்துக்கொண்டு படிப்பார்கள். மேலும், வகுப்பறையின் கரும்பலகையில் உள்ள விஷயத்தைப் பார்த்து, தனது நோட்டில் எழுத மிகுந்த சிரமப்படுவார்கள்.

மேற்கூறிய குறைபாடு உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்?

மருத்துவரிடம் அழைத்துச் செல்வதை ஏதேனும் காரணம் சொல்லி தள்ளிப்போடக்கூடாது. தள்ளிப்போடுவதன் மூலமாக, உங்கள் குழந்தையின் சிக்கல் அதிகரிக்கத்தான் செய்யும். பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கண்ணாடி அணிவதை விரும்புவதில்லை.

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கியவுடன், ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம் கண் மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தை கண் தொடர்பான எந்த பிரச்சினையையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்கூட, வருடாந்திர பரிசோதனை பல எதிர்கால நன்மைகளுக்கு அடிப்படையான ஒன்றாகும்.

பல கண் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணங்கள் யாவை?

ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம் செலவிடுதல், ஜீன் தொடர்பான குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள், கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல காரணிகள், கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

கண்பார்வை கோளாறுகள் வருமுன் காத்துக்கொள்வது எப்படி?

வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு தவறாமல் ஊட்ட வேண்டும். காரட் மற்றும் பச்சைக் காய்கறிகள் முக்கியமானவை. மேலும், சூரிய ஒளியில் தேவையான அளவு உங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கவும். அப்போதுதான், வைட்டமின் ஏ மற்றும் டி போன்றவை கிடைக்கும்.

உங்கள் குழந்தை படிக்க அமரும் இடம் நல்ல வெளிச்சமாக இருக்கிறதா, வெளிச்சம் கண்களில் நேராக படாமல் இருக்கிறதா என்று பார்த்து அமர வைக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது, UV கதிர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சன் கிளாஸை உங்கள் குழந்தை அணியச் செய்து அழைத்துச்செல்ல வேண்டும்.

தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக உங்களின் குழந்தை அமரும் நேரத்தை முடிந்தளவு குறைக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்கும்படி இருப்பது நல்லது மற்றும் குறைந்தபட்சம், தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து 6 அடி தூரம் வரை தள்ளி அமர்ந்து பார்க்கச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேலாக தொலைக்காட்சிப் பார்க்க அனுமதிப்பது நல்லதல்ல மற்றும் அதையும் தொடர்ச்சியாக செய்ய அனுமதிப்பதும் நல்லதல்ல.

கண்களுக்கான பயிற்சிகள் பற்றி?

கண்ணுக்கான பயிற்சிகள், கண்ணின் தசைகளை வலுப்படுத்துகின்றன. உங்கள் குழந்தை மிகவும் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கையில், அவ்வப்போது கண்களை நன்றாக சிமிட்டுமாறு சொல்ல வேண்டும். இதன்மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது.

மேலும், இத்தகைய பயிற்சிகளின் மூலம் ஒருவர் தெளிவாகவும், கவனமாகவும் பார்க்க முடியும். மேலும், கண் மருத்துவர், உங்கள் குழந்தையின் நிலைமைக்குத் தக்கவாறு, தேவையான கண் பயிற்சிகளையும் பரிந்துரை செய்வார்.

கண் கண்ணாடிகளைப் பற்றி...

கண் பார்வை மோசமானதொரு நிலையில் இருந்தால், கண் கண்ணாடி அவசியம் தேவை. அதற்கு வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான கண் கண்ணாடிகள், பல வண்ணங்களில் இன்று கிடைக்கின்றன. பிளாஸ்டிக் கண்ணாடிகள், பயன்படுத்துவதற்கு எளிதாகவும், நீண்டகாலம் உழைக்கக்கூடியதாகவும் உள்ளன.

எனவே, கண்ணாடி அணியும் தேவை ஏற்பட்டால், எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் அவற்றை பயன்படுத்துமாறு உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள். கண் கண்ணாடிகள் அணிவதற்கு, பெரியவர்களைவிட, குழந்தைகள் எளிதாக பழகி விடுவார்கள்.

ஏனெனில், தங்களின் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தை அவர்கள் எளிதில் உணர்வார்கள். அதேசமயம், contact lense பயன்படுத்தலாம் என்று விரும்பினால், அவற்றை தகுந்த முறையில் பாதுகாப்பாக கையாளும் பக்குவமும், வயதும் உங்கள் குழந்தைக்கு வந்த பின்னர்தான் பயன்படுத்த தொடங்க வேண்டும்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

வேதியியல் படிக்காத மாணவர்களும் பயன்பெற ஏ.ஐ.சி.டி.இ புதிய ஆலோசனை


மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.


இதன்மூலம், வேதியியலை ஒரு பாடமாக, பள்ளி மேல்நிலையில் படிக்காத மாணவர்கள், பெரிதும் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து AICTE வட்டாரங்கள் கூறியதாவது: தங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பில் வேதியியலைப் படிக்காவிட்டாலும், அவர் JEE நுழைவுத்தேர்வை எழுதும் வகையில் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன்மூலம், வேதியியல் படிக்காமல், கணினி அறிவியல், மெக்கானிக்ஸ், பயோடெக்னாலஜி போன்ற பாடங்களைப் படித்தவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தற்போதைய நிலையில், மருத்துவப் படிப்பில் சேர, உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பொறியியல் படிப்பில் சேர, இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

ஜே.இ.இ. தேர்வுமுறையில் மாற்றம்

மேலும், JEE தேர்வு விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவரவும் JEE வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது ஒரேநாளில் நடக்கும் அந்த தேர்வை, அடுத்த ஆண்டு முதல் 2 நாட்களாக பிரித்து நடத்த உத்தேசிக்கப்பட்டு வருகிறது.

2013ம் ஆண்டின் JEE தேர்விலிருந்து உயிரியல் பாடம் தள்ளிவைக்கப்பட்ட பிறகு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, இரண்டு பாடங்களுக்கும் தலா 50 மதிப்பெண்களாக இருந்த நிலை மாறி, தலா 75 மதிப்பெண்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட இந்த இரண்டு பாடங்களையும் எழுத, தலா 1.30 மணி நேரங்கள் ஒதுக்கப்படும்.

கணிதப் பாடத்திற்கு மட்டும் 100 மதிப்பெண்கள் மற்றும் அதை எழுதி முடிக்க, 2 மணி நேரங்கள் வழங்கப்படும். JEE தேர்வு 2 நாட்களாக நடத்தப்படும் முடிவு எடுக்கப்பட காரணம், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகளை மேற்கொள்ள நினைப்பவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, முதல் கட்ட தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களும், இரண்டாம் கட்ட தேர்வில் உயிரியல் பாடமும் இருக்கும். இதன்மூலம், ஒரேநாளில் JEE  தேர்வுக்காக, கிட்டத்தட்ட 10 மணிநேரங்கள் செலவழிக்க வேண்டிய கடின நிலையிலிருந்து, மாணவர்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

கல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி உள்பட ஏழு பேர் கைது


நெல்லை மாவட்ட பெண் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் குடும்பத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஏர்வாடியில் உள்ள தனியார் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர் யுனைசிகிரேனா. அந்த பள்ளியின் நிர்வாகம் மாற்றப்பட்டதால், நிர்வாகியின் மனைவியை தலைமையாசிரியையாக பணிநியமனம் செய்வதற்காக இவரை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
 இவருக்கு உடந்தையாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெண் அலுவலர் செயல்பட்டாராம். எனவே பெண்அதிகாரியை கண்டித்து நேற்றும், இன்றும் நெல்லை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியை யுனைசி கிரேனா, அவரது கணவர் கிப்சன், ஏழு வயது மகன் கிரேசியஸ் ஆலிவ் மற்றும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்து ஜங்ஷன் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன


"ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்பவேண்டும்" என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன், தனித் திறமைகளைஊக்குவிக்கும் வகையில் ஓவியம், தையல், கைத்தொழில், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பிரிவுகளில் கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

வாரத்துக்கு ஒரு வகுப்புக்கு இரண்டு பாடவேளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து படிப்பு, தேர்வு, மனப்பாடம், மதிப்பெண் என்ற நோக்கத்தில், ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இரு பாடவேளை வரப்பிரசாதம். பிற பாடங்களை காட்டிலும் இதுபோன்ற வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க முன் வருகின்றனர்.தற்போது மாநிலம் முழுவதும் 3,200 நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ல் 231 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 321 பேரை பணி நியமனம் செய்ய சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடந்தது. ஆனால், பணி நியமனம் செய்யப்படவில்லை.

ஆறு ஆண்டுகளாக நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடாமல் இழுபறியாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில் 52, திருப்பூர் 20, நீலகிரி 12 உட்பட மாநிலம்முழுவதும் 927 கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு மாற்றாக பகுதி நேர ஆசிரியர்களை 5000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர். வாரத்தில் மூன்று நாட்கள் பணிக்கு வர வேண்டும்.இந்த ஆசிரியர்கள் ஓவியம், தையல், இசை கற்பித்தலுக்கு பதிலாக பிற பணிகளைத் தான் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஊதியமும் மிகுந்த இழுபறிக்கு பின் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: "காலியாகஉள்ள நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொழில் நுட்ப தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி 2007க்கு பின் நிறுத்தப்பட்டது.கைத்தொழில் வகுப்பு குறைந்து வருகிறது. வேலைவாய்ப்பு அலுவல பதிவுமூப்பு அடிப்படையில் 9,000 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் கலை என்ற ஓர் வகுப்பு இல்லாத சூழல் ஏற்படும்." இவ்வாறு அவர்கூறினார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

மாணவனின் நேர்மை: பாராட்டிய பொதுமக்கள்


தேனி உழவர்சந்தையில் கீழே கிடந்த பணத்தை எடுத்த கல்லூரி மாணவன் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.

தேனி உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்பவர் ராஜா. இவர் நேற்று காலை காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒரு வேலையாக எழுந்து சென்றார். அப்போது பாக்கெட்டில் இருந்த பணம் 2000 ரூபாய் சந்தையில் ஒரு இடத்தில் கீழே விழுந்து விட்டது.

சந்தைக்கு காய்கறி வாங்க வந்த தேனியை சேர்ந்த மதன்குமார், 21, என்ற கல்லூரி மாணவர் இந்த பணத்தை எடுத்தார். எடுத்து சந்தை அலுவலகத்திற்கு வந்து உதவி நிர்வாக அலுவலர் தாமோதரன், செந்தில்குமார் ஆகியோரிடம் கொடுத்தார். அவர்கள் மைக்கில் இது குறித்து அறிவிப்பு செய்தனர்.

இதனிடையே பணத்தை காணாமல் தேடிக் கொண்டிருந்த ராஜா அலுவலகத்திற்கு ஓடி வந்தார். அந்த பணம் தன்னுடையது என்பதை அடையாளத்துடன் கூறினார். உடனே நிர்வாக அலுவலர்கள் சந்தைக்குள் வந்திருந்த விவசாயிகள், பொதுமக்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த பணத்தை ராஜாவிடம் ஒப்படைத்தனர்.

பணத்தை பெற்ற ராஜாவும், அங்கு கூடியிருந்த மக்களும் மாணவன் மதன்குமாரின் நேர்மையை பாராட்டினர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

முதுகலை ஆசிரியர்களுக்கான அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் நடந்த சான்றிதழ் சரிபார்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 as per the Provisional List dated 11.10.2013. A few candidates were absent for certificate verification and some candidates who attended the certificate verification did not produce the required certificates.Now, it is decided by the Board to give both of them another opportunity to attend the certificate verification or to produce the certificates at the venue and date mentioned below.


Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 as per the Provisional List dated 11.10.2013. A few candidates were absent for certificate verification and some candidates who attended the certificate verification did not produce the required certificates.Now, it is decided by the Board to give both of them another opportunity to attend the certificate verification or to produce the certificates at the venue and date mentioned below.


Date : 06.11.2013

Venue : Government Girls Higher Secondary School, Ashok Nagar, Chennai

No other chance shall be given.Member Secretary


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு



 பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தேர்வுத் துறை புதிய இயக்குனராக தேவராஜன் பொறுப்பு ஏற்றதில் இருந்து துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் "வரும் ஆண்டில் இரு பொதுத்தேர்வுகளும் ஒன்றாக நடக்கும்; லோக்சபா தேர்தல் காரணமாக, ஒரு மாதம் முன்கூட்டி, பிப்ரவரியிலேயே, தேர்வு துவங்கிவிடும்" என ஒரு மாதமாக பேச்சு அடிபடுகிறது. இதை, தேர்வுத் துறை இயக்குனர் ஏற்கனவே மறுத்துள்ளார்.

 இந்நிலையில் சென்னையில் உள்ள பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இரு நாட்களாக பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை தலைமை ஆசிரியர்களே வெளியிட்டு வருகின்றனர்.

தகவல் இல்லை
 அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "லோக்சபா தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வு துவங்கி விடும் என, எங்களுக்கும் தகவல் வருகிறது. பிளஸ் 2 தேர்வு பிப்., 19ம் தேதி முதல் நடக்கும் என சக ஆசிரியர் தெரிவிக்கின்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக தேர்வுத் துறையிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

 முன்கூட்டி தேர்வு துவங்குவதாக இருந்தால் அதற்கு பள்ளிகள் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்றார்.

திருப்புதல் தேர்வு
 தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கூறியதாவது: "பிளஸ் 2 தேர்வு பிப்., 19ல் துவங்கிவிடும். எனவே வழக்கமாக மூன்று "ரிவிஷன்" (திருப்புதல் தேர்வு) தேர்வுகளுக்குப் பதில் இரு தேர்வு மட்டுமே நடக்கும். தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராக வேண்டும்." இவ்வாறு, ஆசிரியர் தெரிவித்து உள்ளனர்.

 இந்த தகவலை வழக்கம்போல் தேர்வுத் துறை மறுத்துள்ளது. அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "என் மகனும் இன்று காலை (நேற்று), இதே கேள்வியை கேட்டான். பல பள்ளிகளில் இந்த தகவல் பரவியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் தற்போது வரை முன்கூட்டியே தேர்வை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேவையில்லாமல் யாரோ வதந்தியை கிளப்பி விடுகின்றனர்" என, தெரிவித்தார்.




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNTET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு



 தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது


இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும்
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
4. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
5. தமிழக ஆசிரியர் கூட்டணி,
6. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
7. தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
ஆகிய 7 அமைப்புகளும் இதில் பங்கேற்று ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இயக்கங்களும் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.

முக்கிய முடிவுகளை மேற்கண்ட 7 இயக்கஙகளும் இணைந்து மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி : திரு.முத்து பாண்டியன்




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு



          சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன், சி.மணி, ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

          தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

            இதில், உதவி பேராசிரியர் பதவிக்கு பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது.

             எனவே, உதவி பேராசிரியர் பதவிக்கு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும், அதன் அடிப்படையில் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


                     இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெ.லட்சுமிநாராயணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்கள், பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக உள்ளது. எனவே, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

DUAL DEGREE CASE இன்று (30.10.2013) வரிசை எண் 43 ல் விசாரணைக்கு வருகிறது



           இன்று (30.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 43-ல் விசாரணைக்கு வருகிறது. இன்றாவது வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

RMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி



             அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.

          நிகழ்ச்சியில்அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும், இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.

         அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.

             இப்பயிற்சி பணிமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்  பணிபுரியும்  80 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

            திரு.ஆ.சங்கர், திட்ட இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சென்னை அவர்களால்  இப்பயிற்சி பணிமனையானது துவங்கி வைத்து, திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நுணுக்கங்கள் குறித்தும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

               அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்கள் தலைமையாசிரியர்கள்; ஆசிரியர்களை எவ்வாறு நல்லிணக்கப்படுத்தி மாணாக்கர்களுக்கு கல்வி கற்பிப்பது என்றும், கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்களை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வது என்றும் தலைமையாசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு.வருவான் வடிவேலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

                அனைவருக்கும் இடைநிலைக்;கல்வி இயக்க மாநில திட்ட நிர்வாக ஆலோசகர் திரு.கு.முத்துசாமி, அவர்கள் தினமும் முன்னேற்றத்தை நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வது எப்படி என ஆலோசனைகள் வழங்கினார். கிருஷ்ணகிரி  மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்  திரு.மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையாசிரியர் பண்புகள் மற்றும் ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளித்தார். தருமபுரி மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என்.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி அளித்தார். திரு.வ.ராஜா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), திரு.சு.ஜெயச்சந்திரன் பயிற்சி ஆலோசர் , அஇகதி, சென்னை, திரு.வி.கல்யாணசுந்தரம், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, சென்னை, திரு.ஜி.ஜெயக்குமார், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, கிருஷ்ணகிரி,   அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி தலைமையாசிரியர் திரு.நடராசன் அவர்கள்  நூறு சதவீத இலக்கை அடைவது எப்படி என தன் அனுபவத்தை தலைமையாசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


               இப்பயிற்சி பணிமனை வளாகத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கோளரங்கம் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கோளரங்கத்தை கண்டு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.தனசேகரன் அவர்கள் நன்றியுரை வழங்க இப்பயிற்சி இனிதே நிறைவுற்றது.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!



          தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

         தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

                இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: கடந்த 2009-ம் ஆண்டு முதல் மத்தியஅரசால் குழந்தைகளுக்கான இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்-2009 நடைமுறைபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 2010 ஏப்ரல் முசல் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய அம்சமாக 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முடிக்கும் வரையில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளித்த வேண்டும் என்பதே ஆகும். பள்ளியில் சேர்க்கப்படாமலோ அல்லது படிப்பை இடையில் நிறுத்தியிருந்தாலோ அக்குழந்தைக்குரிய வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக பள்ளிக்கு செல்லாத ஒரு குழந்தை தனது 12 வயதில் பள்ளிக்கு வந்து தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டால் தலைமைஆசிரியர் அக்குழந்தையை 7-ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றாலும், அவன் சொல்லும் பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு, சேர்க்கை அளிக்க வேண்டும்.

               4 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்: ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது அடிப்படை கல்வித்தகுதியை பெற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராத இருக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் அரசு பள்ளிக்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இதுவரை 50 சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை. அவ்வாறு தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியில் சேருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் காலிப் பணியிடம் முழுவதும் நிரப்பப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் பட்சத்தில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் 4 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலிப் பணியிடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

             தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது: தமிழகஅரசு தற்காலிகமாக தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே நிரப்பிக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாத நிலையில், பள்ளிகளில் காலிப் பணியிடங்களாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களான (Non Teaching) இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்புவதற்கு அரசு அனுமதி தர முன்வரவில்லை.

            2 ஆண்டுகளாக சிறப்பு கட்டணம் வழங்கப்படவில்லை: அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து வேறு எந்த கட்டணமும் பெறப்படாத நிலையில் சிறப்பு கட்டணம் மட்டும் (6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.32, 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.47, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.103) பெறப்பட்டு பள்ளியில் சில்லரை செலவினங்களை செய்து வந்தனர். இந்த கட்டணத்தையும் மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டாம் என்றும், அரசே இந்த கட்டணத்தை பள்ளிக்கு வழங்கும் என முந்தையஅரசு அறிவித்து கொடுத்து வந்தது. ஆனால் இந்த கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான சில்லரை செலவினங்களை தங்களது பணத்தை கொண்டு செலவு செய்துவிட்டு சிறப்புக்கட்டணத்தை எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.


          எனவே அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சிறப்பு கட்டணத்தையும் வழங்கவும் தமிழக அரசு கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிடில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி காட்டி அரசு பெருமை சேர்த்து வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

Tuesday, 29 October 2013

TAMIL NADU VOTAR'S PART NUMBER AND SL. NUMBER வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம்


        தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்

click here-Search Your Name in Electoral Roll by EPIC Number
click here-To see ur Roll No & Part No



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

INDIAN NATIONAL FLAG தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு

 இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

REVIEW MEETING IN EDUCATIONAL DEPARTMENT

 பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

PG TRB - Call Letter for Candidates in Additional List




 Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Call Letter for Candidates in Additional List


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

 தீபாவளிப் பண்டிகையை 2013ஐ முன்னிட்டு தீயணைப்பு துறையின் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி அவற்றை தலையாசிரியர் மூலமாக மாணவர்களுக்கு வழங்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவு




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

PG TRB 2013 TAMIL RE-EXAM COURT ORDER CANCELLED

 டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!

 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.

 எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

 ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : ராமதாஸ்


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.
 அதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ. 17,165 மட்டுமே தொடக்க ஊதியமாக வழங்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை விட மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதம் சுமார் ரூ.10,000 குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே விதமான பணியை செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்கப்படுவது சரியல்ல. இது மாநில அரசு ஆசிரியர்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும்.

ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆசிரியர்களின் குறைகளை களைய வேண்டிய அக்குழு, ‘‘ இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் பணியாற்றுகின்றனர்; அங்கு விலைவாசி குறைவாக இருப்பதால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கத் தேவையில்லை’’ என்ற அதிமேதாவித்தனமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது. அரசும் அதையேற்று ஊதிய உயர்வு அளிக்க மறுத்தது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவான பணி மூப்பு கொண்ட சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஏழாவது ஊதியக் குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஓய்வுக்காலத்தை ஆசிரியர்கள் நிம்மதியாக கழிக்கும் வகையில் புதிய ஓய்வூதியக் கொள்கையை கைவிட்டு, பழைய ஓய்வூதியக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டையும் இப்போதுள்ள ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

LOCAL HOLIDAY நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNTET RTI - TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT

RTI  2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

புதைத்தல் கவிதை


புதைத்து வைத்திருக்க
வேண்டியவற்றை புதைக்காமலும்
புதைத்து வைத்திருக்கக்
கூடாதவற்றை புதைத்தும்
வருகிறான் நடமாடும்பிணம்.

உயிர் வாழ
தேவையானது பணம்
அதை பிணமாக
புதைத்து வைத்து
பல உயிர்களை நடைபிணமாக
அலைய விடுகிறான் - இவன்

உழைப்பாளிச் செம்மல்
சுரங்கத்திலிருந்து இரத்தத்தை
வியர்வையாக்கி தங்கத்தை
பூமியிலிருந்து வெளியுலகுக்கு
கொண்டு வருகிறான்.

வெளியிலுள்ள இவனோ
நேரத்தை செலவிட்டு
மீண்டும் அதனை
பூமியில் புதைத்து
உழைப்பை ஏளணம்
செய்து வாழ்கிறான்
இவன் மனிதனே அல்ல
நடமாடிவரும் பிணமாவன்.

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு



 கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவில்லை.

ஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

 அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.


 அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

 அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டது தொடர்பாக, நேற்று, சட்டசபையில் விவாதம் நடந்தது.

 அதன் விவரம் வருமாறு:

 மா.கம்யூ., பாலகிருஷ்ணன்: அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 அமைச்சர் பழனியப்பன்: ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற, ஆங்கிலத் திறன் அவசியமாகிறது. ஆங்கிலவழிக் கல்வி கற்றவர்கள், எளிதாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில், சேர்க்கின்றனர். அங்கு கட்டணம் அதிகம் இருந்தாலும், சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொடக்கப் பள்ளிகளில் இருந்து, கல்லூரி வரை, தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

PTA BOOKS விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம் விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.




பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ., சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெரும் வகையில் குறைந்த விலையில் வினா விடை வங்கி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதிலும் 36 மையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வினா விடை புத்தங்கள் விற்பனை துவங்கியது. தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாவிடை புத்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்வழி வினா விடை புத்தகங்கள் 180 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 தமிழ் வழி வினாவிடை புத்தங்கள் 325 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிளஸ் 2 வினா விடை புத்தங்கள் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், இரண்டு நாட்களில் இங்கு விற்பனை கொண்டு வரப்பட்ட ஆங்கில வினா விடை விடை புத்தங்கள் விற்பனை ஆனது.

நேற்று (அக்., 26) ஆங்கில வழி வினா விடை புத்தங்களை வாங்க வந்த மாணவ, மாணவிகள் புத்தகங்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினர். கூடுதல் வினா விடை புத்தங்கள் கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

விடுபட்டுள்ள தாவரவியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை புத்தகங்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்களை பள்ளிக் கல்வித்துறை எடுக்க மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: "தற்போது முதற்கட்டமாக பெரும்பாலான பாடங்களின் வினா, விடை புத்தங்கள் வந்துள்ளன. ஆனாலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான பாடமான தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை தற்போது விற்பனைக்கு வரவில்லை. இப்பாடங்களின் வினாவிடை புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNTET ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்களில் எவ்வித மாற்றம் இல்லை

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்களில் எவ்வித மாற்றம் இல்லை




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது.  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.  அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.
 அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா?   அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா?   அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?  அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா?  அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!  ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா?  அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா?  அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம்,   தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?  நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்; சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே?   இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?  அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை.  ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும்,   அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர்.   இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்;   ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது,  அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா?  தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல.  அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்?   ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல.  இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள்.   அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!  தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?  காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும்,   அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால்,   ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா?  வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில்,  அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,  தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே...  அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா?  பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா?  கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது,  தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?  அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை?   பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்?  இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில்,  எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?  பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது.   மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)- க்குள் தள்ளப்படுகின்றனர்.   அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது.   பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.  அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர்.   அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை.  ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.  அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

நவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


"தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 1ம் தேதி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 15 யூனியன்களில், 812 துவக்கப்பள்ளி, 209 நடுநிலைப்பள்ளி என, மொத்தம், 1,021 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 53 ஆயிரத்து, 536 மாணவர், 52 ஆயிரத்து, 169 மாணவியர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 5,705 பேர் படிக்கின்றனர்.
மேலும், 3,361 அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் நவம்பர், 2ம் தேதி தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாடை எடுப்பது, இனிப்பு வகைகள் தயாரிப்பது, ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குச் செல்வது என, தீபாவளி பண்டிகைக்கு முன், ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்நிலையில், நவம்பர், 1ம் தேதி பள்ளி வேலை நாளாக இருப்பதால், தீபாவளி ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள போதிய நேரம் இல்லை.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், தீபாவளி ஆயத்தப்பணியை மேற்கொள்வதற்கு வசதியாக, நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் பள்ளி தலைமையாசிரியர்கள், நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என, அந்தந்த ஏ.இ.இ.ஓ.,விடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அனைத்து பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை விடுவதற்கான அதிகாரம், ஏ.இ.இ.ஓ.,வுக்கு இல்லை என்பதால், தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பாதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டு, மீதி பள்ளிகள் செயல்பட்டாலும், மாணவர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருக்கும்.
எனவே, பல்வேறு தரப்பினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, நவம்பர், 1ம் தேதி, நாமக்கல் மாவட்ட கலெக்டர், உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின், எருமப்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராசு கூறியதாவது:
அரசு அறிவித்துள்ள பள்ளி வேலை நாட்களுக்கும் அதிகமாகவே, தற்போது வரை, மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அதனால், பள்ளி வேலை நாள் கணக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெளியூரில் இருந்து இம்மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர், மாணவர்கள் முன்கூட்டியே அவரவர் சொந்த ஊருக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படாது.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (29.10.2013) அமல்

 திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

           திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
           காலை 9.40 மணிக்குள் SMS மூலமும்,மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

School Profile updation extended upto 08/11/2013

 School Profile updation extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


 தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது. இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்.
www.tndge.in




நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

TNTET 2013 RESULTS ARE READY TO PUBLISH

 டி.இ.டி., தேர்வு முடிவு தயார். எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி.



 கணிதம்,தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும்,சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே,அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

 புரூக்ளினில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: முந்தைய தலைமுறைகளில் எந்தவிதமான போட்டியுமின்றி பொருளாதாரத்துறையில் நாம் வலுவாக இருந்தோம். இப்போது லட்சக்கணக்கான திறமைசாலிகள் பெய்ஜிங்,பெங்களூர்,மாஸ்கோவிலிருந்து உருவாகி வருகின்றனர். அவர்களுடன் நீங்கள் (அமெரிக்கர்கள்) நேரடியாக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.அந்த நாடுகள் கல்வித்துறையில் நம்மை முந்திவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணிதம்,அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அவர்கள் நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டனர்.

 நாம் இப்போது21-ம் நூற்றாண்டு உலகமயமாக்கச் சூழலில் வாழ்கிறோம்.இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் உலகின் எந்த நாடுகளிலும் குவியலாம். கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான்,நிறுவனங்கள் வேலையை வழங்குகின்றன.எனவே,சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைத்து,கல்வித் துறையில் முன்னேற வேண்டும். உயர் கல்விக்கான கட்டணம் அதிகமாக உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கல்விக் கடன் சுமையில் அவதிப்படுகின்றனர்.

 கட்டணத்தை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக சில மாதங்களுக்கு முன்பு,கட்டணக் குறைப்பு தொடர்பான யோசனையை முன்வைத்தேன். கல்வி,அறிவியல் ஆராய்ச்சி,கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில்,பொறுப்புடன் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்" என்றார் ஒபாமா.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

Monday, 28 October 2013

TNPSC GROUP 1 EXAM RESULTS 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்



           தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

      நெல்லையில் மூத்த வக்கீல்கள் திருவுருவ படத்திறப்பு விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

               "டி.என்.பி.எஸ்.சி., நடத்திய டி.எஸ்.பி., துணை கலெக்டர், மாவட்ட பதிவாளர் போன்ற 25 பணியிடங்களுக்கான குரூப்1 தேர்விற்கு ஆயிரத்து 372 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 84 சதவீதம் தேர்வு எழுதினர். குரூப்1 தேர்வு சிறந்த முறையில் நடந்தது.

                விடைத்தாள்கள் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு 3 மாத காலத்திற்குள் முடிவு வெளியிடப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படவுள்ளனர்.

                    கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும்" இவ்வாறு என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

உரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள்



 "ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை" போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.

 கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், போட்டுத் தள்ளி விட்டனர்! இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான்.

 "இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை" என ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை. அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்று? கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, "ஹீரோ!" அதுவே, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், சரியாக படிக்கவில்லை என்றால், "ஜீரோ!"

 ஆக, மதிப்பெண் ஒன்று தான், கல்வியின் குறிக்கோளாக இருக்கிறது. படிப்பு வரவில்லை என்றால், விட்டு விட வேண்டியது தானே... ஒருவனுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தால், இன்னொருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்; வேறொருவனுக்கு, தொழிற்கல்வியில் ஆர்வம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.அதை விடுத்து, அடுத்த வீட்டுப் பையனும், எதிர் வீட்டுப் பையனும் மதிப்பெண் பெறுகையில், நம் வீட்டுப் பையனோ, பெண்ணோ நன்றாக படிக்கவில்லையே என்ற பெற்றோரின் கவலை, பின், அவர்களது, தன்மானப் பிரச்னையாகி விடுகிறது.

 இவர்கள் பள்ளியில் முறையிட, நிர்வாகம், ஆசிரியரிடம் கட்டளையிட, அங்கே உருவாகிறது பிரச்னை. ஆசிரியர் என்ன மந்திர ஜால வித்தை செய்பவரா, "ஜீபூம்பா" சொல்லி, நிமிஷத்தில், எல்லாவற்றையும் மாற்ற... இப்படி, பெற்றோர், மாணவன், நிர்வாகம் என, ஆளாளுக்கு பாடாப் படுத்தினால், பாவம், ஆசிரியர்கள் தான் என்ன செய்வர்? அதற்காக, அத்தனை ஆசிரியர்களையும், நல்லவர்கள், வல்லவர்கள் என, போற்றிப் புகழவில்லை.

 மற்ற தொழில்களைப் போல, பணம் ஈட்டும் ஒரு தொழிலாகவே இதை நினைத்து, பணியில் சேரும் ஆசிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். உண்மையை சொல்லப் போனால், மேற்குறிப்பிட்ட அசம்பாவிதங்கள் அதிகளவில் நிகழ்வதற்கும், இவர்கள் தான், முக்கிய காரணமாக இருப்பர். அதற்காக, ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை கூறுவது, நியாயம் தானா என்பது தான் கேள்வி.

 வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், "ஹோம் ஒர்க் செய்தீங்களா.... ஒன்பதாவது, "லெசன்" எடுங்க..." என பாடங்கள் நடத்தத் தயாராகி விடுகின்றனர், ஆசிரியர்கள். முன்பு, ஆசிரியர் - மாணவன் உறவு என்பது, தந்தை - மகன் உறவாகவே இருந்தது. ஆசிரியர்கள், மாணவனை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்தனர். அன்பு, கண்டிப்பு, கவனிப்பு என, பெற்றோர் போல, பார்த்துக் கொண்டனர். கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, அறிவு சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

 ஆனால், இன்று, தேர்வில் மதிப்பெண் குறைந்தால், பள்ளி நிர்வாகத்திற்கு பதில் கூற வேண்டுமே என்ற கவலையால், &'சிலபஸ்&' தவிர, நாட்டு நடப்பு, நல்லது கெட்டது என, எதைப் பற்றியும், ஆசிரியர்கள் வாய் திறப்பதில்லை; அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமுமில்லை.

 பாடம், தேர்வு, மதிப்பெண் இதுவே அவர்களது கவலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம்; இன்றைய கல்வியின் தாரக மந்திரமும் அது தான்!இப்படி, ஆசிரியர்-மாணவன் இடையே, நல்லுறவு இல்லாததால், அன்பு கலந்த கண்டிப்பு இல்லாமல் கொடுக்கும் தண்டனைகளே, இது போன்ற வன்முறை சம்பவங்களுக்கு காரணமாகின்றன. விளைவு, ஆசிரியர்கள் மாணவர்களையும், மாணவர்கள் ஆசிரியரையும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

 மாணவனின் தேர்ச்சி மட்டும் முக்கியமல்ல; ஒழுக்கம், அறிவு, வளர்ச்சி என, அனைத்தும் தான், நாளைய தலைவனுக்கு தேவை என்பதை உணர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறையோ, கைகட்டி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அப்படியானால், இது மட்டும் தான் பிரச்னையா... வேறெதுவும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமில்லையா என்றால், ஏன் இல்லை...

 காணாமல் போன மாலை நேர விளையாட்டுகள், தனிக்குடித்தன வரவால் தொலைந்து போன உறவுகள், &'வீட்டுக்கு ஒரு குழந்தை&' என்றாகிப் போனதால், உடன்பிறப்பு இல்லாததால் வாட்டும் தனிமை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், பேசக் கூட நாதியில்லாத வாழ்க்கை என, பல்வேறு காரணிகளால், இன்றைய மாணவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும், உளவியல் ரீதியான பிரச்னைகள் எண்ணிலடங்கா.

 இவை ஒரு புறம் என்றால், தொலை தொடர்பு சாதனங்கள், &'தொல்லை&' தொடர்பு சாதனங்களாகி, மாணவர்களை, பல வகையில் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.இவை அனைத்தின் பாதிப்பே, மாணவர் தற்கொலைகளும், கொலை பாதக செயல்களும்...

 இதற்கு தீர்வு தான் என்ன?உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு வடிகாலாக, கல்விக் கூடங்கள் இருக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம். பாடத் திட்டத்தை மட்டும் கற்றுக் கொடுக்காமல், கற்பவரை நெறிப்படுத்தி, ஒழுக்கத்தை கற்றுத் தருவதோடு, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், மனத் திடத்தையும் கொடுக்கக் கூடியதாக, கல்வி அமைய வேண்டும்.

 நன்னெறிகள், நீதி போதனைகள், வாழ்க்கைக் கல்வி என்றெல்லாம் சொல்லப்படும், நல்லொழுக்கக் கல்வி தொடர்பான வகுப்புகள், தவறாமல் இடம் பெற வேண்டும். மாணவர்கள் உடல் நலம் பேணக் கூடிய, உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு, பெயரளவிற்கு இருக்காமல், இருவரது கருத்துகளும் பரிமாறப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், கவுன்சிலிங் வகுப்புகள் இடம் பெற வேண்டும்.குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வாரம் இரு முறையாவது, கவுன்சிலிங் பாட வேளை அமைய வேண்டும். தற்போதைய சூழலில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டியது அவசியம். இவற்றில் எல்லாம் கல்வித்துறையும், அரசும் கவனம் செலுத்த வேண்டும்.

 அதோடு, ஆசிரியர்களும், தம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளை, தம் குழந்தைகளாக பாவித்து, நடத்த வேண்டும். மாணவர்களை, வார்த்தைகளால் குத்திக் குதறினால், ஒன்று, அவர்கள் குப்பைகளாவர் அல்லது குமுறி எழுந்து, இதுபோன்ற வன்முறை கொடுமைக்காரர்களாவர். நம்மிடம் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை தடம் மாற, நாமே காரணமாகலாமா என்பதை உணர்ந்து, நடக்க வேண்டும்.

 &'ஒரு நல்ல ஞானாசிரியனால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்&' என்ற, விவேகானந்தரின் கூற்றை மனதில் பதித்து, ஒவ்வொருவரும், நல்ல ஞானாசிரியராக செயல்பட்டால், இன்னொரு சம்பவம் இது போன்று நடக்காது.
 - இரா.ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி
  நன்றி : தினமலர்



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியம் முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட்டது சார்பாக இயக்குநர் தெளிவுரை வழங்கி உத்தரவு

 பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியம் முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட்டது சார்பாக இயக்குநர் தெளிவுரை வழங்கி உத்தரவு



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

DEE - GRIEVANCE DAY POSTPONED FOR NOV'2013 DUE TO DEEPAVALI HOLIDAY

 தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு


அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த ஆசிரியைகள் ஜமுனாராணி (42), லதா(48) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் லதா 8ம் வகுப்புக்கு ஆசிரியையாக உள்ளார்.


கடந்த 22ம் தேதி 8ம் வகுப்பு மாணவர் நவீனை நோட்டு வாங்கி வரும்படி கணக்கு ஆசிரியை ஜமுனாராணி அனுப்பியுள்ளார். மாணவரிடம் ஜமுனாராணியை, லதா திட்டியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதா, ஜமுனா ராணியை கன்னத்தில் அறைந்து விட்டார். சக ஆசிரியர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு, உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி இரு ஆசிரியைகளுக்கும் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் மறுநாளும் இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று, ஆசிரியை லதா, ஜமுனா ராணி தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் ஜமுனாராணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து ஆசிரியை ஜமுனாராணி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தன்னை லதாவும், அவரது கணவர் ரவியும் பள்ளிக்கு வந்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.

இதன்பேரில் லதா, அவரது கணவர் ரவி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு கூறுகையில், ‘‘அரசு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் பணியாற்றி ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். ஆனால், இரு ஆசிரியைகளையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தபிறகும், அவர்கள் தங்களது பிரச்னையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. காவல்துறையின் நடவடிக்கையை பொறுத்து, இரு ஆசிரியைகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப் படும்’’ என்றார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது


அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர்.


ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள்என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதியகாலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போதுஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம். தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்றபெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர்.

அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில்காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறதுஅரசு ஊழியர் சங்கங்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் 2 லட்சம் பேர் ஓய்வுபெற உள்ளதால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறையில்தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் காலியிடங்கள் ஏற்படப்போகிறது. இதனால் மக்கள் நல திட்டங்கள்தான் அதிகம் பாதிக்கும். இப்போதே அரசு துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது.

மேலும் கொல்லைப்புறம் வழியாக அவுட்சோர்சிங் என்ற முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். மருத்துவ துறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவுட்சோர்சிங் வழியாக ஸ்டாப் நர்சுகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவதுறை அளிக்கின்ற ஊதியம். Rs 5500 ஆனால்ஏஜென்சிகளுக்கு கமிஷன் போகஸ்டாப் நர்சுகளுக்கு கிடைப்பது வெறும் Rs 4000 ம்தான். பேரூராட்சிகளில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்குடிரைவர் ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. டெண்டர் மூலம் டிரைவர்களை தேர்வு செய்கின்றனர்.

Rs 4000,Rs 3000 மாத சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். அதுபோன்று எல்லா அலுவலகங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர்ஆப்ரேட்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக எம்சிஏ பட்டதாரிகள் கூட Rs 2000,Rs 2500 சம்பளத்திற்கு பேரூராட்சிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.இப்போது ஊராட்சிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் 2ஆயிரம்தான். தற்போதையவிலைவாசியில் ரூ.2 ஆயிரத்தை கொண்டு என்ன செய்ய முடியும்? குறைவான சம்பளத்தை கொடுப்பதின் மூலம் இவர்களிடம் இருந்து நிறைவான பணியை எதிர்பார்ப்பதும்இயலாது போகிறது. மேலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. மற்றொருபுறம்பணியிடங்களே காணாமல் போகிறது.

உதாரணத்திற்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலஅலுவலகத்தில் 80 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது அது 60 பணியிடங்களாககுறைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பணியிடங்கள்நீண்டநாட்களாக காலியாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோன்று இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் எழுத்தர் நிலையில் 14 பேர் பணிபுரிந்தஇடத்தில் பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது 6இடங்களில் ஆள் இல்லை. இதுபோன்றுஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும்பணியிடங்கள் குறைப்பு, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் வாயிலாக அரசு துறைகளில் ஆட்கள் நியமனம் என்றுபணியாளர் நியமனத்தில் ஒரு புதுமுறையை அரசு செயல்படுத்துவது போன்று உள்ளதுஎன்றார். எனவே புதிதாக ஆட்களை தேர்வு செய்து காலியிடங்களை நிரப்புவது மூலம் நடைபெறுகின்ற முறையான ஊழியர் நியமனமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககாலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 2லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் மேலும் 2லட்சம் ஊழியர்கள் வரும் 6 மாத காலத்திற்குள் பணி ஓய்வுபெற இருப்பதுடன் அடுத்து 2016ம்ஆண்டுக்குள் மேலும் 2 லட்சம் பேர் பணி ஓய்வு பெற இருப்பதும் அரசு இயந்திரத்தின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் அபாயம் உள்ளது. என்றார். வேலைப்பளு அதிகரிப்புஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள்தேர்வு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போன்று உள்ளது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் 40 உதவியாளர் பணியிடங்கள் காலியாகஉள்ளது. பொதுவாகஇளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இப்போது 1800 உதவியாளர் பணியிடம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது. இவற்றுக்கு 243 பேரை மட்டும் குரூப்&2 தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களை கொண்டு எவ்வாறு எல்லா அலுவலகத்திலும் பணிகளை செய்ய இயலும்?இப்போதே பெரும்பாலான துறைகளில் 2 ஊழியரின் பணியை சேர்த்து ஒரு ஊழியர் கவனிக்கிறார்.இனி காலியிடங்கள் அதிகரிப்பால் இந்த பணி பளு மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இவ்வாறு கூறினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

டிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையில் நடைபெறவுள்ளது


டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை அலுவலகத்தில் (இராமுன்னி மாளிகை) 09.11.2013 சனிக்கிழமையன்று காலை நடைபெறவுள்ளது.

கூட்ட அழைப்பு கடிதத்தினை தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரங்கராஜன் அவர்கள் தோழமை சங்கத்தினருக்கு அனுப்ப உள்ளார் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

மாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர் மீது வழக்கு


ராஜபாளையம் அருகே மோசடியாக பலருக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக தலைமையாசிரியர் மீது கோர்ட் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் சதாசிவம், 66. இவர், ஊஞ்சாம்பட்டி தனியார் உயர்நிலைப்பள்ளியின் செயலராக உள்ளார். இந்தப் பள்ளியில் 2005 முதல் 2011 வரை ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தை சேர்ந்த சுப்பையா, 44, தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பின் சத்துணவு ஊழியரை தாக்கியதாக பிரச்னையில் சஸ்பெண்ட் ஆனார்.

சமீபத்தில், பள்ளிக்கு வந்தவர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ் நகல் கோரினர். பள்ளி நிர்வாகம் சோதித்தபோது அடிக்கட்டையில் குறிப்பிட்ட நபர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் இல்லை. விசாரணையில், தலைமையாசிரியராக இருந்த சுப்பையா, 32 பேருக்கு மோசடி மாற்றுச்சான்றிதழ் வழங்கியது தெரிந்தது.

இதுகுறித்து, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் கோர்ட்டில் பள்ளி செயலாளர் சதாசிவம், மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் அருணாசலம் உத்தரவுப்படி ராஜபாளையம் தெற்கு போலீசார் சுப்பையா மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி


ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.

உண்மையான சான்றிதழ்களை அனைத்து விண்ணப்பங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் அவற்றின் நகல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், போட்டோ காப்பிகள் உண்மையானவை தான் என்பதை உறுதிபடுத்த கெசட்டட் அதிகாரிகளின் கையெழுத்து அந்தச் சான்றிதழ்கள் மீது இடப்படுகின்றன.

பல அதிகாரிகள் அதற்கு பணம் கேட்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், அத்தகைய அதிகாரிகளைத் தேடி அலைவதால் மாணவர்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது என்பதை அறிந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; இறுதியில், உண்மைச் சான்றிதழ்களை காட்டி அதை உறுதிபடுத்திக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது.

இது, கிராமப்புற மாணவர்கள் மற்றும் பலதரப்பினருக்கும் பலனளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. விரைவில், அனைத்து வகை மாணவர்களும் தாங்களாகவே அட்டெஸ்ட் செய்து கொள்ளும் அறிவிப்பு வெளியாகும் என, இத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

PRIVATE EXAM RESULTS தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை


தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தோல்வியுற்ற பாடங்களை எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. தனித் தேர்வர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் அந்தந்த தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்.

இணையதளத்தில் முடிவை பார்க்கும்போது மீண்டும் தேர்ச்சி வாய்ப்பை இழக்கும் சில மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட நாளுக்கு பின், அவர்களது மதிப்பெண் சான்று பள்ளி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நீண்ட நாள் கழித்து தேவையெனில் மதிப்பெண் சான்றுகளை பெற முடியாமல் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் சான்று கோரும் நிலை உருவாகிறது. இவற்றை தவிர்க்க தேர்வு முடிவு விவரத்தை இணையதளத்தில் வெளியிடுவதில்லை என, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "2013-14ம் கல்வி ஆண்டிலேயே இணையதளத்தில் தனித்தேர்வர்கள் முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இம்முறை தேர்வு முடிவு வெளியான அன்றே மதிப்பெண் சான்று வழங்கப்பட்டது. இதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்," என்றார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக கற்க முடியும்"


வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம்தான் பாடங்களை தெளிவாக கற்க முடியும் என காந்திகிராம பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) ஜோசப் துரைராஜ் பேசினார்.

பல்கலை கல்வித்துறை சார்பில்ஆசிரியர் தின சிறப்பு சொற்பொழிவு நடந்தது. துறை தலைவர் ஜாகிதாபேகம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) ஜோசப் துரைராஜ் பேசும்போது,

"சர்வதேச அளவிலான தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் 200க்கும் பிந்தைய இடத்தில்தான் உள்ளன. ஆசிய அளவில் கூட இவை தர வரிசையில் பின்தங்கியுள்ளன என்பது வருந்தத்தக்கது. நமது நாட்டில் ஆசிரியர்களை மையப்படுத்திய பாடமுறைகள் அமைந்திருப்பதுதான் இத்தகைய பின்னடைவிற்கு முக்கிய காரணம். மாணவர்களை மையமாக கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டால் கல்வித்தரம் வெகுவாக உயர்வடையும்.

பள்ளி முதல் கல்லூரி, பல்கலை வரையிலும் வகுப்பறைகளில் மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம்தான் சந்தேகங்கள் நீங்கி பாடங்களை தெளிவாக கற்க முடியும். பாடத்திற்கு அப்பாற்பட்ட உலகியல் சார்ந்த விஷயங்களையும் மாணவர்கள் அறிய முடியும்," என்றார்.


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

25 பேருக்கு "லட்சிய ஆசிரியர் - 2013" விருது



"ஆசிரியர் தினம்" முன்னிட்டு, "தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013" விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மிகுந்த ஆர்வமுடன் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில், 25 சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழா, கோவை, காந்திபுரம், ராம்நகரிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: அனைவரிடமும் திறமை உண்டு. அந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே, அதனை மேம்படுத்த முடியும். பாராட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் மகிழ்விக்கிறது. ஆசிரியர்களின் திறமைகளை கண்டறிந்து பாராட்டும் "தினமலர்" நாளிதழுக்கு நன்றி.

துறைகள் எதுவாக இருந்தாலும், குறைகளை சுட்டிக்காட்டும் "தினமலர்" நாளிதழின் நோக்கம் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் மனதைத் தொடும் விதத்தில், ஆசிரியர்களின் செயல்பாடு அமையவேண்டும். பிற பணிகளை போன்றதல்ல, ஆசிரியர் பணி. மனதளவில் ஒன்றுதலோடு பணியாற்றினால் மட்டுமே, சிறப்பாக செய்ய முடியும்.

அழகிய சிற்பங்களை உயிரோட்டத்துடன் எதிர்கால சமூகத்திற்கு கொடுக்கவேண்டியது, ஆசிரியர்களின் தலையாய கடமை. அதை உணர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு, ஞானகவுரி பேசினார். "லட்சிய ஆசிரியர் - 2013" விருது பெற்ற ஆசிரியர்கள் கூறுகையில், "இன்றைய தினம், எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத, இனிமையான நாள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய எங்களைப்போன்ற ஆசிரியர்களை கவுரவித்ததன் மூலமாக, தினமலர் நாளிதழ், ஆசிரியர்களின் கல்விச்சேவைக்கு பக்க பலம


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.

பள்ளிகளுக்கு மத்தியில் பெரும் இடையூறாக "டாஸ்மாக்"


சின்னமனூரில் பள்ளிகள், கோயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கடையை உடனடியாக இடம்மாற்ற பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

சின்னமனூரில் முத்தாலம்மன் கோயில் பகுதி, பொன்னகர் பகுதி இணையும் இடம் திருவள்ளுவர் பள்ளி தெருவில் வருகிறது. இப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றப்பட்ட டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதியில் பல்வேறு இடையூறுகளும், பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.

நான்கு வீதிகளுக்கு இணைப்பு தெருவாக உள்ள இப்பகுதியில் 2 கோயில்கள், 4 பள்ளிகள், ஒரு ஐ.டி.ஐ., பெண்கள் கழிப்பறை, மாணவிகளுக்கான விடுதி உள்ளிட்டவைகள் இக்கடையின் அருகருகே அமைந்துள்ளன. இதுதவிர அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மெயின்ரோடு உள்ளிட்டவைகளுக்கு இந்த பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இதனால் தினந்தோறும் எந்த நேரத்திலும் பெண்களும், மாணவ மாணவிகளும், அரசு அலுவலர்களும், பொதுமக்களும் இந்த தெருவின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தெருவில் புதிதாக டாஸ்மாக் கடையை திறந்திருப்பதால், பெண்களும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எப்போதும் இந்த தெருவில் குடிமகன்களின் தொல்லையை மக்கள் சந்திக்கின்றனர். தெருவில் குடிகன்கள் செய்யும் ரகளையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தவிர, அனைத்து சமுதாயத்தினரும் இங்கு வசிப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள், மனித உரிமை கழகத்தில் புகார் செய்தனர். இந்த அமைப்பின் நிர்வாகிகள், இக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசிற்கும், அதிகாரிகளுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளனர்.



நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். நன்றி.