Sunday, 14 September 2014

தமிழ் சொல் ஒன்று - பொருள் வேறு

சொல் ஒன்று - பொருள் வேறுவடமொழி எனப்படும் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் ஒரே வடிவமுடையனவாக வழங்கப்படும் சொற்கள் ஒலி விடிவில் ஒற்றுமைப்பட்டிருப்பினும்,வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன.

இந்த அறியாமையைப் பலர் அறிவதில்லை. நிகர்வடிவமுடைய சமஸ்கிருதத்தின் தென்மொழிச் சொற்கள், முரணான பொருளில் வழங்குவதைப் பின் வரும் பட்டியலில் காணலாம்.

வ. எண் வடமொழி (சமஸ்கிருதம்)
சொல்லும் பொருளும்
தமிழ் மொழி
சொல்லும் பொருளும்
1 உத்தியோக - முயற்சி உத்தியோகம் - வேலை
2 உபந்யாச - நாவல், புதினம் உத்தியோகம் - வேலை
3 கல்யாண் - நல்ல, மங்கள கலியாணம் - திருமணம்
4 சரித்ர - ஒழுக்கம் சரித்திரம் - வரலாறு
5 சேஷ்டா - முயற்சி சேஷ்டை - கெட்ட நடவடிக்கை
6 பிரசங்கம் - முன்பின் சந்தர்ப்பம் பிரசங்கம் - சமயச் சொற்பொழிவு
7 பத்ர - மென்மையான பத்திரம் - சாக்கிரதை
8 ம்ருக - மான் மிருகம் - விலங்கு
9 விலாஸ் - சுகபோகமான விலாசம் - முகவரி
10 சங்கதி - தொடர்பு சங்கதி - செய்தி
11 சம்சார் - உலகம் சம்சாரம் - மனைவி
12 சமாதான் - ஐயங்களை விளக்குதல் சமாதானம் - ஒத்துப் போதல்
13 சாது - சந்நியாசி சாது - எளியவன், சரளமானவன்
14 அபராத் - குற்றம் அபராதம் - தண்டனை
15 ஆதர - மரியாதை ஆதரவு - துணை
16 பாச - பயிறு பாசம் - பற்று
17 பிரச்ன - கேள்வி பிரச்சினை - சிக்கலான செய்தி
18 ஆலய - இடம் ஆலயம் - கோயில்
19 காய - சரீரம் காயம் - புண்
20 நீர - தண்ணீர் நீர் - நீங்கள்
21 பத்ர - இலை, கடிதம் பத்திரம் - விலைச்சீட்டு
22 பிரமாத் - சோம்பேறித்தனம் பிரமாதம் - நன்றாக
23 யோஜனா - திட்டம் யோசனை - சிந்தனை
24 ரண - போர் ரணம் - காயம்
25 துவார் - வாயில் துவாரம் - சந்து
26 அன்னம் - சமைத்த சாதம் அன்னம் - அன்னப் பறவை
27 வயிராகி - பற்றற்றவன் வைராக்கியம் - மன உறுதி
28 வைபவ - செழிப்பு வைபவம் - குடும்ப நிகழ்வு
29 சர - அம்பு சரம் - மாலை தொடுக்கும் நூல்
30 சாலா - கூடம் சாலை - பாதை
31 ஸ்ருங்கார் - இன்பச் சுவையுள்ள சிங்காரம் - அழகுபடுத்தல்
32 சமய் - காலம் சமயம் - மதம்
33 சகாய - உதவி சகாயம் - மலிவான
34 சித்தி - ஆன்மிக வெற்றி சித்தி - தாயின் தங்கை
35 காதக் - கொள்பவன் காதகன் - பொறாமைக்காரன்
36 பசு - பிராணி பசு - பசு மாடு
37 மணி - இரத்தினம் மணி - காலம்
38 சமாச்சார் - உயர்ந்த ஒழுக்கம் சமாச்சாரம் - செய்தி
39 அகம் - ஆணவம் அகம் - உள்ளே (வீடு)
40 கேவல் - தனியே கேவலம் - இழிந்த
41 புருஷ் - ஆண் மகன் புருஷன் - கணவன்
42 விகட் - மிகக் கடுமையான விகடம் - நகைச்சுவை
43 அவதி - எல்லை அவதி - துன்பம்
44 விஜய் - வெற்றி விஜயம் - வருகை
45 விஷய - ஐம்பொறிகளால் நுகரும் பொருள்கள் விஷயம் - செய்தி
46 ஆலோசனா - திறனாய்வு ஆலோசனை - யோசனை கேட்பது
47 ஆஸா - நம்பிக்கை ஆசை - விருப்பம்
48 நிர்வாணம் - முத்தி, வீடுபேறு நிர்வாணம் - ஆடையற்ற நிலை
49 நாம் - பெயர் நாமம் - திரிபுண்டரம் அணிதல்
50 காலக்ஷேப - காலத்தைக் கழிப்பது காலட்சேபம் - சமயச் சொற்பொழிவு
51 முத்ரா - நாணயம் முத்திரை - சின்னம்
52 மாத்ரா - அளவு மாத்திரை - மருந்து

மேலே கண்ட அட்டவணையில் இரு மொழிச் சொற்கள் ஒன்று போல் தோன்றினாலும், பொருள் வேறாக இருக்கிறதல்லவா?
 
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

No comments:

Post a Commentதங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.