Friday, 26 December 2014

1,200 பள்ளிகளில் விதிமீறல் அரசு கடும் நடவடிக்கை

 1,200 பள்ளிகளில் விதிமீறல் அரசு கடும் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுமார் 1,200 பள்ளிகள் விதிமுறைகளை மீறி இயங்கி வருவது தெரியவந்துள்ளது. பெங்களூரு நகரில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர்களிடம் அதிகளவில்
நன்கொடை வாங்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுடன், பள்ளி சிறுமிகளிடம் பள்ளி காவலர்கள், ஆசிரியர்கள் பாலியல் தொல்லை தருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினரின் கண்டன போராட்டங்களும் நடைபெற்றன. பெங்களூருவில் செயல்படும் 1,200 தனியார் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை நடத்துவதற்கு மாநில அரசிடம் அனுமதி வாங்கிவிட்டு, விதிமுறைகளை மீறி 10-ம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. அத்துடன் கன்னட மொழி பள்ளி என அரசிடம் அனுமதி பெற்று, ஆங்கிலப் பள்ளிகளாக நடத்துகின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாநில அரசின் பல்வேறு வழிகாட்டு விதிமுறைகளை மீறிய 1,200 பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பு கெடக் கூடாது என்பதால், அடுத்த கல்வி ஆண்டில் இப்பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள் அவர்கள் விதிமீறல்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில அரசின் பொதுவழிமுறை துறையின் கமிஷனர் முகம்மது மொகிசின் கூறி உள்ளார்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

No comments:

Post a Comment



தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.