Tuesday, 16 September 2014

முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) - வரலாறு

முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) - வரலாறு

எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு 'The Great' அல்லது   'The Greatest' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்துகொள்ளவிருக்கிறோம். விளையாட்டுத் துறையில்  'The Greatest' என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி

மைக்கலாஞ்சலோ - வரலாறு

மைக்கலாஞ்சலோ - வரலாறு


இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரை நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக வருணிக்கிறது வரலாறு. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டியதால்தான் அந்த வர்ணனை. அவர் வேறு யாருமல்ல  'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஓவியத்திற்கும், சிற்பத்திற்கும் உண்மையான மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ.

ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாறு

ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாறு

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார்

ஜோசப் லிஸ்டர் (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) - வரலாறு

ஜோசப் லிஸ்டர் (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) - வரலாறு



'மரண பயம்' என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். ஆனால் சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட மரண பயம் ஏற்பட்டது என்பது

'லியொனார்டோ டாவின்சி' - வரலாறு

'லியொனார்டோ டாவின்சி' - வரலாறு

1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில்

வில்லியம் ஷேக்ஸ்பியர் - வரலாறு

வில்லியம் ஷேக்ஸ்பியர் - வரலாறு

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல

இரவீந்தரநாத் தாகூர் - வரலாறு

இரவீந்தரநாத் தாகூர் - வரலாறு

உலகத்தரம் வாய்ந்த அமர இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் பல்வேறு காலகட்டங்களில் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியங்களை உலகம் முழுவதும் படித்து ரசிக்க வேண்டுமென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவற்றை அந்தந்த மொழி பேசுபவர்களே ரசிக்க முடியும். தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்திற்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழி பெயர்க்கப்படும்போது அதன் இயற்கை சுவையும், வீரியமும் குறைந்து விடும்

எட்வர்ட் ஜென்னர் - வரலாறு

எட்வர்ட் ஜென்னர் - வரலாறு

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று

சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை) - வரலாறு

சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை) - வரலாறு

ரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை

சார்லஸ் டிக்கென்ஸ் - வரலாறு

சார்லஸ் டிக்கென்ஸ் - வரலாறு

நாம் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது ஆங்கில பாடத்தில் Oliver Twist என்ற நாவலை மறந்திருக்க முடியாது. குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாக மாறி ஒரு சிறுவன் படும் இன்னல்களை சித்தரிக்கும் ஓர் அற்புத நாவல் அது. 'ஆலிவர் ட்விஸ்ட்' என்ற அந்த கதாபாத்திரமும் அந்த நாவலும் தத்ரூபமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்த கதாசிரியர் தனது சொந்த அனுபவங்களை எழுதியிருப்பதுதான். பொதுவாக கற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவக் கதைகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். அப்படி வீர்யமிக்க பல இலக்கிய படைப்புகளைத் தந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு எழுத்தாளரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

ஜான் எஃப் கென்னடி - வரலாறு

ஜான் எஃப் கென்னடி - வரலாறு

1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி இரத்தம்கூட சிந்தமால் ஒரு மாபெரும் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் தனி ஒரு மனிதனின் தைரியமும், தொலைநோக்கும், உன்னதமான தலமையத்துவப் பண்பும்தான். அவர்தான் அமெரிக்க வரலாற்றிலேயே ஆக இளைய வயதில் அதிபர் ஆனவரும், ஆக இளைய வயதில் மரணத்தைத் தழுவியவருமான ஜான் எஃப். கென்னடி (John F Kennedy).

'சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாறு

'சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாறு

'இமாலய சாதனை' என்ற சொற்றொடரை கேள்பிப்பட்டிருப்பீர்கள். இமயத்தைத் தொடுவதற்கு நிகரான ஒரு சாதனை என்பதுதான் அதன் பொருள். இந்த சொற்றொடர் 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் உலகிலேயே ஆக

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாறு

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாறு

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.

கன்பூசியஸ் (தத்துவ மேதை) - வரலாறு

கன்பூசியஸ் (தத்துவ மேதை) - வரலாறு

தத்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு வருவது கிரேக்கமாகத்தான் இருக்கும். அந்த தேசம்தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ்

மூலதனம் (கார்ல் மார்க்ஸ்) - வரலாறு

மூலதனம் (கார்ல் மார்க்ஸ்) - வரலாறு



"உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற

ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வரலாறு

ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வரலாறு

மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஒலியிலிருந்து பிறந்தன பல மொழிகள். மொழிகள் பல்கி பெருகியதால் அனைவரும் புரிந்துகொள்வதற்கும்,

Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை)

Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) 

அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். "Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள்

இசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாறு

இசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாறு



இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும்

பெலே (காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன்) - வரலாறு

பெலே (காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன்) - வரலாறு

இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் ஒருமுறை இவ்வாறு கூறினார். "பீத்தோவன்  எப்படி இசைக்காக பிறந்தாரோ அதேபோல் நான் காற்பந்தாட்டத்திற்காக பிறந்தேன்" இது ஆணவத்தால் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. இப்படி ஒரு ஒப்பீட்டை அவர் செய்திருக்காவிட்டாலும் பின்னாளில் உலகம் நிச்சயம் செய்திருக்கும். அவர்தான் காற்பந்தாட்ட

ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வரலாறு

ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வரலாறு

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ். அந்தப் பெயரை ஒலிம்பிக்

Dr. வீ கிம் வீ (மக்கள் அதிபர்) - வரலாறு

Dr. வீ கிம் வீ (மக்கள் அதிபர்) - வரலாறு



"வாழ்க்கை என்ற அதிர்ஷ்ட குலுக்கில் நாம் எவ்வாறு பிறக்கிறோம் என்பதையோ,பிறந்த பிறகு வரும் அதிர்ஷ்டங்களையோ துரதிர்ஷ்டங்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் முழுமையாக போராடினால் துரதிர்ஷ்டம் நம் பாதையைக் கடந்தாலும் நம்மால் அதனை வெற்றியாக மாற்ற முடியும்".

1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அது. குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் கெளரவ

'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாறு

'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாறு



நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (The Real Superman) -வரலாறு

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (The Real Superman) -வரலாறு

உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும்

'சர்' ஜகதீஷ் சந்திர போஸ் (அறிவியல் மேதை) - வரலாறு

'சர்' ஜகதீஷ் சந்திர போஸ் (அறிவியல் மேதை) - வரலாறு



உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு

பேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாறு

பேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாறு

உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ மாமன்னர்களையும், வீர அரசர்களையும் சந்தித்திருக்கிறது சரித்திரம். பெரும்பாலான மன்னர்கள் பிற தேசங்களை கைப்பற்றியதால் வரலாற்றை வசமாக்கினர். வேறு சிலர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர். இன்னும் சிலர் அரச வம்சத்தில் பிறந்தோம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசாண்டு முடித்தனர்.

பிளேட்டோ (தத்துவஞானி) - வரலாறு

பிளேட்டோ (தத்துவஞானி) - வரலாறு

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார்.

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாறு

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாறு

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.

'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727) - வரலாறு

'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727) - வரலாறு


ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

ஆப்ரா வின்ஃப்ரெ (The Oprah Winfrey Show) - வரலாற்று நாயகி!

ஆப்ரா வின்ஃப்ரெ (The Oprah Winfrey Show) - வரலாற்று நாயகி!

"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது" 

சுவாமி விவேகானந்தர் - வரலாறு

சுவாமி விவேகானந்தர் - வரலாறு

1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - வரலாறு

மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - வரலாறு



மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு:

தத்துவஞானி அரிஸ்டாடில் - வரலாறு

தத்துவஞானி அரிஸ்டாடில் - வரலாறு


உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ். அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு.

ஆபிரகாம் லிங்கன் - வரலாறு

ஆபிரகாம் லிங்கன் - வரலாறு

கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாறு

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாறு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 

கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம்

கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம்



2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

ஆர்க்கிமிடிஸ் - வரலாறு

ஆர்க்கிமிடிஸ் - வரலாறு

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் வரலாறு

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் வரலாறு

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு

ஹமில்டன் நாகி - மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை!! வரலாறு

ஹமில்டன் நாகி - மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை!! வரலாறு

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதி தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.அவரது உடலில் இதயம் மட்டும்தான்

சர் ரோஜர் பேனிஸ்டர் ( ' The Miracle Mile Man') - வரலாறு


சர் ரோஜர் பேனிஸ்டர் ( ' The Miracle Mile Man') - வரலாறு 

வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் உண்டு. இதுவரை எட்டப்படாத ஓர்  இலக்கை தீர்மானித்து மற்றவர்கள் அந்த இலக்கை அடையுமுன் நாம் அந்த இலக்கை அடைவது அந்த வழிகளில் ஒன்று. எதையுமே முதலில் சாதிப்பவர்களுக்குதான் வரலாறும் முதல் மரியாதை தருகிறது. புதிய இலக்குகளை அடைவது என்பது விளையாட்டு உலகத்திற்கும் பொருந்தும்

தொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - வரலாறு

தொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - வரலாறு

நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன்

இசை மேதை மோட்ஸார்ட் (Mozart) - வரலாறு


இசை மேதை மோட்ஸார்ட் (Mozart) - வரலாறு

எதற்கும் மயங்காத உள்ளம் இசைக்கு மயங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகத்திற்கே பொதுவான ஒரு மொழி என்றால் அது இசையாகத்தான் இருக்க முடியும். மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை பாமரனால்கூட ரசிக்க முடியும் ஆனால் ஒரு சிலரால்தான் அற்புதமான

லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை) - வரலாறு

லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை) - வரலாறு

1794 ஆம் ஆண்டு 'ஃபிரெஞ்சு ரெவூல்யூசன்' எனப்படும் ஃபிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது ஃபிரான்ஸின் ஆட்சிப் பொருப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே

ஹெலன் கெல்லர் - வரலாற்று நாயகி

ஹெலன் கெல்லர் (தன்னம்பிக்கையின் மறு உருவம்) - வரலாற்று நாயகி

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உணர்வுப்பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்ற இயற்கை விதியை தெள்ளத் தெளிவாக உணர்த்தும் ஓர் அசாதரணமான கதை. 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள்  அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா எனும் சிற்றூரில் ஒரு குழந்தை பிறந்தது. அழகாகவும் நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இருந்த தங்கள் குழந்தையின் எதிர்காலம்

விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் வரலாறு

விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் வரலாறு

கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த

வில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின் கதை) - வரலாறு


வில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின் கதை) - வரலாறு

மருத்துவத்துறையின் மிக முக்கியமான ஒரு கூறு அறுவை சிகிச்சையாகும். மருந்துகளாலும், மாத்திரைகளாலும் மட்டும் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமாகிறது. நோய்களுக்கு மட்டுமல்ல விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்துபோனோருக்கும், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கெல்லாம் மயக்க மருந்து கொடுக்காமல் உடலை அறுத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து

மாவீரன் நெப்போலியன் கட்டுரை

மாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்') - வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த  மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர்

ஸ்காட் ஹமில்டன் (figure skating championship) - வரலாறு

ஸ்காட் ஹமில்டன் (figure skating championship) - வரலாறு


நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்துவிட்டு மறைகிறோமா? அல்லது பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்கிறோமா? என்பதைப் பொருத்துதான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது. நம்மில் பெரும்பாலோர்

சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு' வரலாறு

அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') வரலாறு

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள்

பில் கேட்ஸ் - வரலாறு

பில் கேட்ஸ் - வரலாறு

இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல

'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாறு

'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாறு


நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி

'தமிழ்க் கடல்' மறைமலை அடிகள் - வரலாறு

'தமிழ்க் கடல்' மறைமலை அடிகள் - வரலாறு

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு  மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும்

ஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்! நோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே? எனக்கு ஏன் இந்த பரிசு? என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா?! அவர்தான் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் சைவ உணவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து கிட்டதட்ட 95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மறைந்த ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா. 1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார் பெர்னாட் ஷா. இரண்டு சகோதரிகளை அடுத்து மூன்றாவது பிள்ளை அவர். அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவரது தந்தை George Carr Shaw குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை பணம்கூட குடுக்க முடியாமல் கடற்கரையோரம் ஓர் ஓட்டைப்படகில் அவர்கள் வசித்த நாட்களும் உண்டு. குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை பிஞ்சு வயதிலேயே உணர்ந்தார் பெர்னாட் ஷா. எனவே மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார். 1885-ஆம் ஆண்டு தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைத்தார் பெர்னாட் ஷா. அதுவும் சுமார் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது. ஆனாலும் சொந்தமாகவே நூல்கள் வாசிப்பதில் அவருக்கு அலாதி பிரியம். பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் அதிக கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவர் பின்னாளில் உலகப்புகழ் பெறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கி, இருபதாவது வயதில் இங்கிலாந்து வந்த அவர் நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும். எந்த சராசரி எழுத்தாளனும் சோர்ந்து போயிருப்பான். அவருடைய எழுத்துகளை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. ஆனால் தன் எழுத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட பெர்னாட் ஷா தொடர்ந்து எழுதினார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். முயற்சி வீண் போகவில்லை அவ்வுளவு நிராகரிப்புகளை சந்தித்தப் பிறகு அவருடைய படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வுளவு என்று கணக்கிட்டு சன்மானத் தொகை வழங்கபட்ட நிலையும் வந்தது என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்ல அவர் என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைகளில் செய்தியானது. தன் தாயிடமிருந்து இசைக் கற்றுக்கொண்ட பெர்னாட் ஷா இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். அவர் விமர்சனம் எழுதப்போகிறார் என்றாலே இசை கலைஞர்களுக்கு நடுக்கம் எடுக்குமாம். பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் நாமே ஏன் நாடகங்கள் எழுதக்கூடாது? என்று எண்ணி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. அவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின. நாடகங்களில் அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம். தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை சரமாரியாக கலந்து கொடுத்தார் அவர். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக சில புகழ்பெற்ற சம்பவங்கள் உண்டு. ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தாராம், அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றாராம் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். இன்னொரு புகழ்பெற்ற சம்பவம்.. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாட் ஷாவை சந்தித்த ஓர் அழகிய நடிகை நீங்கள் பெரிய அறிவாளி, நான் சிறந்த அழகி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என் அழகும், உங்கள் அறிவும் கொண்ட குழந்தை நமக்கு பிறக்குமல்லவா? என்று கேட்டாராம். அதற்கு புன்னகைத்துக் கொண்டே அந்தக் குழந்தை உங்களுடைய அறிவையும் என்னுடைய அழகையும் கொண்டு பிறந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம் பெர்னாட் ஷா. மிகப்பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இருந்தது பெர்னாட் ஷாவுக்கு. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றாராம். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். திணவு இல்லாதவர்கள் தடுமாறிப் போயிருப்பார்கள் ஆனால் பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாராம் லாவகமாக. அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. அவர் எழுத்துத் திறனைப் பார்த்து உலகமே வியந்தது. உண்மையில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாதான். அவருடைய நாடகங்கள் சமூக, அரசியல், சமயப் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசின. சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாக சாடின. திட்டமிடப்பட்ட வகுப்புவாதமற்ற சமூகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். அதனாலயே அவ்வபோது அவரிடம் தலைதூக்கிய தற்பெருமையையும், ஆணவத்தையும் இலக்கிய உலகம் பெரிதுபடுத்தவில்லை. பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கெளரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார். அவருக்கு 'Order of the Merit' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால் இப்போது அது எனக்கு தேவையில்லை என்று கூறினார் பெர்னாட் ஷா. தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை. தினசரி குறைந்தது ஐந்து பக்கங்கள் எழுதுவாராம். தன் வாழ்நாளில் கிட்டதட்ட 50 நாடகங்களையும், 5 நாவல்களையும் எழுதினார் அவர். நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார். ஆங்கில இலக்கிய உலகின் பெருமதிப்பைப் பெற்றிருந்த பெர்னாட் ஷா 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தமது 94-ஆவது வயதில் காலமானார். "ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது". பெர்னாட் ஷா கூறிய பல பொன்மொழிகளில் இதுவும் ஒன்று. அவர் நீண்டகாலம் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவருக்கு உதவிய பண்புகள்...தோல்வியைக் கண்டு துவளாத மனோபாவமும், நகைச்சுவை உணர்வும், தீயப்பழக்கங்களை வெறுத்து ஒதுக்கியதும்தான். அந்தப் பண்புகளையும், பழக்கங்களையும் நாமும் பின்பற்றினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும். Read more: http://urssimbu.blogspot.com/2012/08/george-bernard-shaw-historical-legends.html#ixzz3DUI7eaX8

ஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாறு

நோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை) - வரலாறு


மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை) - வரலாறு

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும்

மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா)

மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா)

உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல்

கெளதம புத்தர் - வரலாறு

கெளதம புத்தர் - வரலாறு

இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.

சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாறு


சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாறு

மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம்

சார்லஸ் டார்வின் ( "பரிணாமவியலாரின் தந்தை") - வரலாறு


சார்லஸ் டார்வின் ( "பரிணாமவியலாரின் தந்தை") - வரலாறு




'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம்' என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். கல் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் என்பது கேட்பதற்கு சற்று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிகையான சொற்றொடர்

மார்ட்டின் லூதர் கிங் - வரலாறு

மார்ட்டின் லூதர் கிங் - வரலாறு

மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக

ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாறு

ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாறு

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி

பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாறு

பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாறு 

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலையுலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்

கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) - வரலாறு

கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) - வரலாறு

ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும்

தொலைக்காட்சி உருவான கதை ஜான் லூயி பெயர்டு வரலாறு


தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird வரலாறு

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு

வால்ட் டிஸ்னி - வரலாறு

வால்ட் டிஸ்னி - வரலாறு

உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள்

மகாகவி பாரதியார் - வரலாறு

மகாகவி பாரதியார் - வரலாறு


காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!

நல்லதோர் வீனை செய்து அதை 
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!

நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்!

வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருனைக் கொள்!

இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். 'வரகவி' என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா

லூயி பிரெய்ல் - வரலாறு

லூயி பிரெய்ல் - வரலாறு

இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம்.

ஜேம்ஸ் வாட் - வரலாறு



ஜேம்ஸ் வாட் - வரலாறு

'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே

வாஸ்கோட காமா - வரலாறு

வாஸ்கோட காமா - வரலாறு

புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம்

கலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') - வரலாறு

கலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') - வரலாறு 

"உணர்வுகள், ஆறாம் அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்குத் தந்த கடவுளே அவற்றை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது". சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உதிர்க்கப்பட்ட வசனம் இது. ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம் என்பதும், நிலா பூமியை சுற்றுகிறது என்பதும், பூமி சூரியனை சுற்றுகிறது

லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை) (1822-1895) -வரலாறு

லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை) (1822-1895) -வரலாறு

மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு

மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாறு


மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாறு

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க

வில்லியம் ஹார்வி - வரலாறு

வில்லியம் ஹார்வி - வரலாறு

"இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்...
அன்பே என்னை நீ நீங்கினால் ஒருகணம் என்னுயிர் தாங்காது"....
இந்த பாடல் வரிகளில் விஞ்ஞானம் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதயம் துடிக்கும் வரைதான் உயிர் இருக்கும் என்பதும், இதயம் ஓயும்போது இரத்த ஓட்டம் நின்று போவதால் உயிரும் நின்று போகிறது என்பதும் அறிவியல் நமக்கு சொல்லும் உண்மை. ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு

ரூசோ - வரலாறு

ரூசோ - வரலாறு

உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா

நெல்சன் மண்டேலா - வரலாறு



நெல்சன் மண்டேலா - வரலாறு

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம்

விளக்கேந்திய காரிகை புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp")

புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp") கட்டுரை

மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவதுறைதான். அதனால்தான் மருத்துவர்களை சிலசமயம் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு பார்க்கின்றனர் மரணவாயில் வரை சென்று திரும்பியோரும் அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாறு

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாறு

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்

புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்


புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்

நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும்

புரட்சி நாயகன் லெனின் - வரலாறு




புரட்சி நாயகன் லெனின் - வரலாறு

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து

கல்வியின் நாயகன் ’காமராஜர்’

கல்வியின் நாயகன் ’காமராஜர்’

நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில

மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை)


மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை)



இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது.

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாறு


பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாறு

1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று

தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்)


தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்)

இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. போதுமான மனித வளமும், அறிவு வளமும் அதற்கு நிறையவே இருக்கிறது. அந்த மனித வளத்தையெல்லாம் சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் பயன்படுத்தினால் நமது இந்தியா உலகுக்கே ஒரு முன்னுதாரண தேசமாக விளங்க முடியும். ஆனால் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது இந்தியாவில்தான் பல தேசங்களில் காண

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாறு

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாறு

எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம்,

'சர்' அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (discovery of penicillin) -கட்டுரை


'சர்' அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (discovery of penicillin) -கட்டுரை

நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம்

பெஞ்சமின் ஃபிராங்கிளின் - வரலாறு





பெஞ்சமின் ஃபிராங்கிளின் - வரலாறு

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன்

கிரிகோர் மெண்டல் (மரபியலின் தந்தை)கட்டுரை

  

கிரிகோர் மெண்டல் (மரபியலின் தந்தை)கட்டுரை

மனுகுலம் உண்மையாக வளர்ச்சி அடையத் தொடங்கியது எப்போது? என்று கேட்டால் அதற்கு அறிஞர்களின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். மனிதன் எப்போது 'ஏன்' என்று கேள்விக் கேட்கத் தொடங்கினானோ அப்போதுதான் மனுகுலம் முன்னேறத் தொடங்கியது. உலகில் இதுவரை நிகழ்ந்திருக்கும்

ஆர்க்கிமிடிஸ் வரலாறு

ஆர்க்கிமிடிஸ்கட்டுரை

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை

Sunday, 14 September 2014

கணித விளையாட்டுகள்

கணித விளையாட்டு

62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on

கணிதத்தில் π ன் வரலாறு

கணிதத்தில் π ன் வரலாறு





கணிதம் என்பது ஒரு மாமருந்து, ஒரு தேன் விருந்து, பருக பருக திகட்டாதது. இந்த கணிதத்தில் சுவையின் சுவை சேர்க்க பல சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். கணிதத்தில் ஆழமாக வேரூன்றி தழைத்து நிற்கும்  π என்ற கணிதக் குறீயீட்டின் வரலாற்றினைப் பற்றி பார்ப்போம்.

கணிதப் புதிர்கள்

கணிதப் புதிர் -விடை கூறுங்கள்


ஒரு அரண்மனையில் இருந்து நான்கு பேர் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றனர் . பங்கிட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தனித் தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர் .

எந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்

எந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்

அன்புக் குழந்தைகளே
பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?
இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

கணிதப் புதிர்கள்

கணிதப் புதிர்களை விடுவிப்பீர்களா....? . இதோ புதிர்களின் விடைகள்.

1) கட்டியால் எட்டு கட்டி
காலரை முக்கால் கட்டி
செட்டியார் இறந்து போனார்
சிறுபிள்ளை மூன்று பேர்
கட்டியை உடைக்காமல்
கணக்காய் பிரித்திடுக...

விடை: ¾ கட்டிகள் மூன்று, ½ கட்டிகள் நான்கு, ¼ கட்டிகள் ஒன்று.
மூத்தவனுக்கு இரண்டு ¾ கட்டிகள்
இரண்டாமவனுக்கு ஒரு 3/4 , ஒரு ½ , ஒரு ¼ கட்டிகள்.
இளையவனுக்கு மூன்று ½ கட்டிகள்.

வியப்பூட்டும் கணித விந்தைகள்

வியப்பூட்டும் கணித விந்தைகள்

1x9+2 =11,
12x9+3=111,
123x9+4=1111,
1234x9+5=11111,
12345x9+6=111111,
123456x9+7=1111111,
1234567x9+8=11111111,
12345678x9+9=111111111,
123456789x9+10=1111111111,

விந்தை கணிதம்

விந்தை கணிதம்

12345679 X  9 = 1111111111
12345679 X 9 = 2222222222
12345679 X 9 =3333333333
12345679 X 9 = 4444444444
   
 தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

சங்க இலக்கியத்தில் கொல்லாமை கட்டுரை

சங்க இலக்கியத்தில் கொல்லாமை





"கொல்லாமை" என்பதை தலையாய அறமாக அனைத்துச் சமய தமிழ் இலக்கியங்களும் எடுத்து சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும் போது பௌத்தவர்கள் கொல்லாமையை வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை.

புறநானூற்றில் கல்விச் சிந்தனை கட்டுரை

புறநானூற்றில் கல்விச் சிந்தனை





மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும் போது, "குழந்தைகளிடமிருந்தும் சரி உடல், உள்ளம், ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்" என்பர். கல்வி "வாழ்வின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது" எனக் கல்வியின்

திருநாவுக்கரசர் கட்டுரை

திருநாவுக்கரசர்





என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கொள்கையில் உறுதியாக நின்று உழவாரப்பணி மேற்கொண்டு, சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய போது தன்னை துன்புறுத்திய மகேந்திர பல்லவ மன்னனைச் சைவ சமயத்தின் பால் ஈடுபட வைத்து, பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச்செய்து, திருமறைக்காட்டில் பாடியே கோயில் வாசலை திறக்கச் செய்து, எனப் பல செயற்கரிய செயல்களைச் செய்து 80 வயது வரை திணைத்துணையும் இறைபற்று நீங்காமல்,

கடையெழு வள்ளல்கள் கட்டுரை

கடையெழு வள்ளல்களின் சிறப்புகள்




பள்ளிப் படிப்பின் போது, "கடையெழு வள்ளல்கள்" என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார், யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் "பாரி" என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி என்று கூறி பிறகு தயங்குவதைப் பார்க்கலாம்.

கலித்தொகை காட்டும் தமிழரின் பண்பு நலன்கள் கட்டுரை

கலித்தொகை காட்டும் தமிழரின் பண்பு நலன்கள்





முன்னுரை

சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒரு பாடல். சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ பாடிய பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்து கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிப் பாடல்கள் இருபத்தொன்பது. மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக் கலிப்பாடல்கள் முப்பத்தைந்து,, சோழன்

கலித்தொகையும் திருக்குறளும் கட்டுரை

கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்கள்




முன்னுரை

உலக அறநூல்களுள் ஒப்பற்ற ஒரு நூலாக திகழ்வது நம் திருக்குறளே ஆகும். இனம், நாடு, மொழி, சமயம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்த மனிதகுலத்தை மாண்புறச் செய்யும் நூலாக விளாங்குவதனால்தான் திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்று அனைவருமே போற்றிப் பாராட்டுகின்றனர்.

திருவள்ளுவ மாலையில் மதுரைத்தமிழ் நாகனார் “எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என்று கூறியவாறு எல்லோருக்கும் எல்லாக் காலத்திற்கும் தேவையான எல்லாக் கருத்துக்களையும் எடுத்துக் கூறும் இனிய நூல் திருக்குறளேயாகும். அதனால்தான் திருவள்ளுவருக்குப் பின் தோன்றிய புலவர்கள் அனைவரும் தாங்கள் இயற்றியுள்ள எல்லா நூல்களிலும் திருக்குறள் தொடர்களையும், திருக்குறள் கருத்துக்களையும் அப்படியே எடுத்தாண்டுள்ளார்கள். அந்த வகையில் சங்கத்தொகை நூல்களுள் ஒன்றாகிய – கற்போர்க்கு களிப்பூட்டும் கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்களும் தொடர்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் 150 பாடல்களையும் கொண்ட கலித்தொகையில் 63 பாடல்களிலும் 97 திருகுறட்பாக்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் எடுத்து விளக்கிட விரும்புகின்றேன்.

பாரதியின் சிந்தனைகள் கட்டுரை

பாரதியின்  சிந்தனைகள்





பாரதியின் சிந்தனைகள் நேற்றோடும் காற்றோடும் கரைந்து போகக்கூடியவை அல்ல. கடலும் மலையும் உள்ள வரை, வானும் மண்ணும் உள்ள வரை நிலைத்து நின்று மானுட சமுதாயத்திற்கு வழிகாட்டுவன.

"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்"

மதுரையும் வைகையும் கட்டுரை

மதுரையும் வைகையும் கட்டுரை





மதுரைக் காஞ்சி என்ற பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஆறாவதாக இடம் பெற்றிருக்கிறது. ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிக நீண்டதாக அமைந்திருக்கும் இப் பாடல், 782 அடிகளைக் கொண்டது. இப்பாடல் வஞ்சிப்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து வரும் அடிகளைக் கொண்டது. இது நிலையாமையை உணர்த்தும்

சோழநாட்டு ஊர்களும் விளக்கமும் கட்டுரை

சங்க கால சோழநாட்டு ஊர்களும் விளக்கமும் கட்டுரை





சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

பண்டைய தமிழர் உணவுமுறைகளும் விருந்தோம்பலும் கட்டுரை

பண்டைய தமிழர் உணவுமுறைகளும் விருந்தோம்பலும் கட்டுரை





பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினருக்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும், விருந்தோம்பும் பண்பாட்டையும் பத்துப்பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது.

குறுந்தொகையில் உவமை

குறுந்தொகையில் உவமை



முன்னுரை

நறுந்தேனின் சுவையாய், கற்கும் தோறும் இனிக்கும் இயல்பினையுடையது குறுந்தொகை. சர்க்கரைப் பொங்கலைத் தட்டில் வைத்து அதை எந்தப்பகுதியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் இனிப்புச்சுவை குன்றாது இனிப்பைத் தருமல்லவா? அவ்வாறே குறுந்தொகை எனும் நறுந்தொகைப் பெட்டகத்தில் எல்லாப் பாடல்களும் இனிய சுவையினை நல்க வல்லதாய் அமைந்துள்ளது. பழங்கால மக்களின் வாழ்க்கை முறையையும் பண்பாடு, கலாச்சாரம் முதலிய கூறுகளையும் கண்ணாடி போல் தெளிவாகக் காட்டும்

பேரறிஞர் அண்ணாவின் மொழிநடை கட்டுரை

பேரறிஞர் அண்ணா சிறுகதைகளில் மொழிநடை





முன்னுரை

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வாழ்த்துக்கள் வழங்கவில்லை. பிறந்த குழந்தையின் தலைக்கு மேலே நாகம் படம் விரித்துக் குடை

பத்துப்பாட்டில் இடம்பெற்ற மன்னர்கள் கட்டுரை

பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள்




பண்டைத் தமிழகத்தில் நல்ல அரசுகள் நிலைபெற்றிருந்தன. அந்த அரசுகளின் தலைவர்கள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்கள் பகைவர்க்கு கூற்றுவனாகவும், தம்மை அண்டியவர்களுக்கு அருமைத் தோழர்களாகவும் விளங்கினர். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் புகலிடமாக இருந்தனர். இம்மன்னர்கள் கலைகளை வளர்ப்பதற்கு உறுதுணையாக விளங்கினர்.

மதுரைக் காஞ்சியும் நிலையாமைக் கூறுகளும் கட்டுரை

மதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள்





உலகமும் உலகத்துத் தோன்றும் யாவும் என்றும் நிலையில்லாதன. நிலைபேறுடையது சிறந்த புகழ் ஒன்றே. உயிர்களானது அறவழிப்படுமாயின் நிலையில்லா உடம்பை விட்டு நிலைபேறாம் - வீடுபேற்றை அடையும். இத்தகு கருத்தினை உள்ளடக்கியது நம் சங்கப் புலவர்களின் காஞ்சித் திணைக் கூறுகள். இவ்வியல், மதுரைக் காஞ்சியில் இடம்பெறும் நிலையாமைக் கூறுகள் பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது.

வள்ளுவமும் குடும்பக்கட்டுப்பாடும் கட்டுரை

வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும்




"உலகப் பொதுமறை" என்னும் தமிழ் மறையை வாழ்வாங்கு வாழும் வையத்திற்கு வழங்கியவர், "செந்நாப்போதார்" என்று சிறப்புடன் அழைக்கப்படும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பது உலகறிந்த உண்மை! இவர் பல்வேறு அதிகாரங்களில் பல்வேறு செய்திகளைப் பற்றிக் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக "மக்கட்டேறு" என்ற அதிகாரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை மறைமுகமாக விளக்கிச் சென்றுள்ளார். அது எப்படி என்பதை இனிக் காண்போம்.

பாரதிதாசன் கூறும் பெண்மை கட்டுரை

பாவேந்தர் காட்டும் பெண்மை!




முன்னுரை

இந்திய நாட்டில் அந்நியர் ஆட்சி கொலு வீற்றிருந்த போது, தமிழ்மொழி, தன் சீரும் சிறப்பும் குன்றி, வளமும் வனப்பும் சீர்குலைந்து, தாயினை இழந்து தவிக்கின்ற சேய் போல் இருந்தது! அந்நிலையில், அறிவு ஆதவன் போன்று

வள்ளுவர் கூறும் மருத்துவம் கட்டுரை

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்




நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம்

இலக்கிய அறம் கட்டுரை

இடைக்கால இலக்கிய அறம்





முன்னுரை

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)

உலகில் உள்ள நல்லன எல்லாம் புண்ணியமெல்லாம் ஞானமெல்லாம் ‘அறம்’. எச்செயலெவரானும் பாராட்டப் பெறுகின்றதோ அது அறமாகும். “விலக்கத்தக்கது ஒன்றும், உலகத்துப் பலராலும் பாராட்டப் பெறுமாயின் அறமாகலாம்” என்கிறது சுக்கிர நீதி. (அத் 5.சு35)

ஆண்டாளின் இரு பெரும்பாடல்கள்

ஆண்டாளின் இரு பெரும்பாடல்கள்!





தமிழர் கொடை

ஆண்டாள்! பெண்களின் திலகம். திருத்துழாய்ச் செடியின் கீழ்க்கிடந்த வைரத்துண்டு! பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெருநிதியம். கவிஞனின் ரோசாக்கனவுகள் கூடச் சில வேளைகளில் கலைந்து விடுவதுண்டு. ஆனால், உள்ளத்தில் ஆழப்பதிந்த கண்ணன் என்னும் கனவு கலையவேயில்லை.

பெரிய புராணம் கூறும் பக்தி கட்டுரை

பக்திக்கு வழிகாட்டும் பெரிய புராணம்





தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் பல வகைப்படும். உலக மொழிகள் எதிலும் இன்று வரை காண முடியாத பொருள் அதிகாரம் பற்றிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள தொல்காப்பியம் இன்றும் நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகும். தனித்தன்மை

சுப்ரமணிய பாரதியின் சமூகப்பார்வை கட்டுரை

பாரதியின் சமூகப்பார்வை





முன்னுரை

எமக்குத் தொழில் கவிதை, இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டுக்குழைத்தல் என்ற பாரதியின் சமூகப்பார்வை விசாலமானது. ஊருக்குழைத்தல் யோகம் என்ற உயர் சிந்தனைக்குரியவன் பாரதி. பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று எழுதிக் குவித்தவன் பாரதி.

திருநாவுக்கரசர் காட்டும் திருஞானசம்பந்தர் அற்புதங்கள்

திருநாவுக்கரசர் காட்டும் திருஞானசம்பந்தர் அற்புதங்கள்




பன்னிரு திருமுறையில் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியவை. திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த நாயன்மார்களுள் பதினேழு பேரையும், தம்காலத்தில் வாழ்ந்தவர்களான திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள் ஆகியோரையும் சேர்த்து ஒன்பது நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணலாம். திருஞானசம்பந்தர் வரலாறு மிகப் பெரியதாகும். ‘பிள்ளைபாதி புராணம்பாதி” என்பதற்கேற்ப சேக்கிழார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து ஐந்து பாடல்களில் ஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடுகிறார். திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரத்தில் ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் 'ஆயிரம் பொன் பெற்றது” 'கதவு அடைக்கப் பாடியதும்” ஆகிய இரண்டு நிகழ்வுகளை மட்டும் தம்முடைய தேவாரத்தில் இரண்டு பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கட்டுரை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள்




கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும் அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய வேறு சில சிறப்புகளும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. இவரது கவிதைப் படைப்புகள் பரந்து விரிந்த கவிதை உலகில் பக்திப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப்